திருமங்கலத்தில் ஓட்டு எண்ணிக்கை நான்கரை மணி நேரம் நிறுத்தம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருமங்கலத்தில் ஓட்டு எண்ணிக்கை நான்கரை மணி நேரம் நிறுத்தம்

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (1)
Share
மதுரை :திருமங்கலம் தொகுதியில் ஓட்டுகளை எண்ணும் போது இ.வி.எம்., மிஷினின், 134 எண்ணும், அதில் ஒட்டப்பட்டிருந்த, 132 'ஸ்டிக்கர்' எண்ணும் வேறுபடுவதாக கூறிய தி.மு.க.,வினர் ஓட்டு எண்ணுவதை தடுத்து நிறுத்தினர்.புகார் ஆதாரமற்றது என தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியதை அடுத்து, நான்கு மணி நேரத்திற்கு பின், ஓட்டு எண்ணிக்கை நடந்தது.அமைச்சர் உதயகுமார்மதுரை மாவட்டம், திருமங்கலம்,
 திருமங்கலம், ஓட்டு எண்ணிக்கை, நிறுத்தம்

மதுரை :திருமங்கலம் தொகுதியில் ஓட்டுகளை எண்ணும் போது இ.வி.எம்., மிஷினின், 134 எண்ணும், அதில் ஒட்டப்பட்டிருந்த, 132 'ஸ்டிக்கர்' எண்ணும் வேறுபடுவதாக கூறிய தி.மு.க.,வினர் ஓட்டு எண்ணுவதை தடுத்து நிறுத்தினர்.புகார் ஆதாரமற்றது என தேர்தல் நடத்தும் அலுவலர் கூறியதை அடுத்து, நான்கு மணி நேரத்திற்கு பின், ஓட்டு எண்ணிக்கை நடந்தது.


அமைச்சர் உதயகுமார்



மதுரை மாவட்டம், திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை, மதுரை அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் நேற்று நடந்தது. திருமங்கலத்தில், அ.தி.மு.க., சார்பில் அமைச்சர் உதயகுமார், தி.மு.க., சார்பில் மணிமாறன் போட்டியிட்டனர்.
ஓட்டு எண்ணிக்கையின், 14வது சுற்றின் போது, இ.வி.எம்., 134வது எண் மெஷின் எண்ணுவதற்காக எடுக்கப்பட்டது. ஆனால், பெட்டியின் ஓரத்தில் எண், 132 என இருந்ததால், பெட்டியை மாற்றி விட்டதாக தி.மு.க.,வினர் வாக்குவாதம் செய்தனர். முகவர்கள் இருந்த தடுப்புகளின் மீது மோதினர். போலீசார் சமரசம் செய்ததை ஏற்கவில்லை.

திருமங்கலம் தேர்தல் நடத்தும் அலுவலர் சவுந்தர்யா, சமரசம் செய்தபோது, 'நீங்களும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவா' என கத்தினர். வேறு தேர்தல் நடத்தும் அலுவலரை வைத்து ஓட்டு எண்ண வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனால், மதியம், 2:30 மணிக்கு ஓட்டு எண்ணுவது நிறுத்தப்பட்டது.கலெக்டர் அன்பழகன், தேர்தல் பார்வையாளர் ராம் விகார் ஆகியோர் நேரில் வந்து, இ.வி.எம்., மிஷின் எண் சரியாக இருப்பதாக தெரிவித்தனர். தி.மு.க.,வினர் மறு தேர்தல் நடத்தக் கோரியதை மறுத்தனர். இதனால், மறு ஓட்டு எண்ணிக்கை நடத்தக் கோரினர். இதை, தேர்தல் அதிகாரிகள் மறுத்தனர்.

இது குறித்து, தி.மு.க.,வின் திருமங்கலம் வேட்பாளரின் முகவர் தங்கேஸ்வரன், மற்ற கட்சி முகவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சவுந்தர்யா அறிக்கை அனுப்பினார்.
அதில், 'ஓட்டுப்பதிவு முடிந்தபின், 134வது இ.வி.எம்., மிஷினில் பதிவான ஓட்டுகள் சரிபார்க்கப்பட்டு, ஆட்சேபனை இன்றி ஓட்டுச்சாவடி முகவர்கள், '17 பி' படிவத்தில் கையெழுத்திட்டுள்ளனர். ஓட்டுச்சாவடி மிஷினிலும், '17 பி' படிவத்திலும் ஓட்டு எண்ணிக்கை, 883 என சரியாக உள்ளதால், மிஷின் மாறுவதற்கு வாய்ப்பில்லை.எனவே இந்த புகார் ஏற்கக்கூடியதல்ல. ஓட்டு எண்ணிக்கைக்கு தடையில்லை' என தெரிவித்திருந்தார். நான்கரை மணி நேரத்திற்கு பின், மீண்டும் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. பதற்றத்தை தணிக்க, கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேரில் வந்தார். போலீசார் குவிக்கப்பட்டனர்.


கோவையில் மோதல்



கோவை மாவட்டம், பொள்ளாச்சி தொகுதியில், துணை சபாநாயகர் ஜெயராமன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவருக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. கோவை ஓட்டு எண்ணிக்கை மையத்தில், சான்றிதழ் வாங்கி, வெளியே வந்த ஜெயராமனுடன், அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டபடி வந்தனர்.

அப்போது, அங்கு திரண்டிருந்த தி.மு.க.,வினர், எதிர் கோஷம் எழுப்பத் தொடங்கினர். இரு தரப்பினரும், மாறி மாறி கோஷம் எழுப்பியதால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அதைக் கண்ட தி.மு.க.,வினர், அவருக்கு அருகிலேயே சென்றபடி, அ.தி.மு.க.,வினரை, 'டயர் நக்கி' என்று விமர்சித்து கோஷம் எழுப்பினர்.நிலைமை மோசம் ஆகாமல் தவிர்க்க, போலீசார், இரு தரப்பினரையும் பிரித்து விட்டனர். போட்டி போட்டு கோஷம் போட்டதால் நேற்று மாலை, ஓட்டு எண்ணும் மையத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X