பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., - வி.ஐ.பி.,க்கள் தோல்வி முகம்

Added : மே 03, 2021
Share
Advertisement
திருவள்ளூர்; திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., சார்பில், எட்டு பேரும், கூட்டணி கட்சியான, பா.ம.க., சார்பில், இருவரும் போட்டியிட்டனர்.இதில், பொன்னேரி (தனி) தொகுதியில், சிட்டிங் எம்.எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க., திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலர், சிறுணியம் பலராமன், போட்டியிட்டார்.ஆவடியில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் கா.பாண்டியராஜன், மதுரவாயலில், ஊரக தொழில்

திருவள்ளூர்; திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., சார்பில், எட்டு பேரும், கூட்டணி கட்சியான, பா.ம.க., சார்பில், இருவரும் போட்டியிட்டனர்.இதில், பொன்னேரி (தனி) தொகுதியில், சிட்டிங் எம்.எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க., திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலர், சிறுணியம் பலராமன், போட்டியிட்டார்.ஆவடியில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் கா.பாண்டியராஜன், மதுரவாயலில், ஊரக தொழில் துறை அமைச்சர் மற்றும் அ.தி.மு.க., மத்திய மாவட்ட செயலர், பா. பெஞ்சமின்; மாதவரம் தொகுதியில், அக்கட்சியினர் கிழக்கு மாவட்ட செயலர் மற்றும் முன்னாள் அமைச்சர், மாதவரம் மூர்த்தி போட்டியிட்டனர்.அம்பத்துாரில், தெற்கு மாவட்ட செயலர் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ.,வுமான, அலெக்சாண்டர், திருவள்ளூர் தொகுதியில், அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா; திருத்தணி தொகுதியில், முன்னாள் எம்.பி., அரி ஆகியோர் போட்டியிட்டனர்.இவர்களைத் தவிர, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார். இதில், அனைத்து, வி.ஐ.பி.,க்களும், தி.மு.க., மற்றும் கூட்டணி வேட்பாளர்களை விட, குறைந்த ஓட்டுக்களை பெற்று, தோல்வியை தழுவும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.திருவெற்றியூர் தொகுதியில், 29வது சுற்று முடிவில், சீமான், 45 ஆயிரத்து 508 ஓட்டுக்கள் பெற்று, மூன்றாம் இடத்தில் உள்ளார். தி.மு.க., வேட்பாளர் சங்கர், 82 ஆயிரத்து 163 ஓட்டுக்களும், இரண்டாம் இடத்தில், அ.தி.மு.க.,-குப்பன், 47 ஆயிரத்து 260 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.அ.தி.மு.க., வி.ஐ.பி.,க்கள் போட்டியிட்ட தொகுதி விபரம்:தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பெற்ற ஓட்டு எதிர் வேட்பாளர் பெற்ற ஓட்டு வெற்றி விபரம்மதுரவாயல் பெஞ்சமின் 76,185 (26வது சுற்று) கே. கணபதி தி.மு.க., 1,00,399 தி.மு.க., முன்னிலைஆவடி கா.பாண்டியராஜன் 85,350 (28வது சுற்று) சா.மு.நாசர், தி.மு.க., 1,33,184 தி.மு.க., முன்னிலைபொன்னேரி சிறுணியம் பலராமன் 81,632 (26வது சுற்று) துரை சந்திரசேகர், இ.காங்., 90,151 காங்., முன்னிலைதிருவள்ளூர் பி.வி.ரமணா 83,297 - வி.ஜி.ராஜேந்திரன் (தி.மு.க.,) 1,05,326 தி.மு.க., வெற்றிமாதவரம் வி.மூர்த்தி 45,287 (16வது சுற்று) எஸ்.சுதர்சனம் (தி.மு.க.,) தி.மு.க., முன்னிலைஅம்பத்துார் வி.அலெக்சாண்டர் 61,156 (33வது சுற்று) ஜோசப் சாமுவேல், தி.மு.க., 96,340 முன்னிலைதிருத்தணி கோ.அரி 75,390 (24வது சுற்று) எஸ்.சந்திரன், தி.மு.க., 99,649 முன்னிலை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X