அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னையின் 16 தொகுதிகளையும் அள்ளியது தி.மு.க.,

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ள தி.மு.க., மாநிலத்தின் தலைநகரான சென்னையிலும், மீண்டும் தன் கொடியை நாட்டி உள்ளது.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், சென்னைக்குட்பட்ட, 16 தொகுதிகளிலும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த மாதம், 6ம் தேதி நடந்த ஓட்டுப்பதிவின் போது, சென்னையில் உள்ள, 16

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ள தி.மு.க., மாநிலத்தின் தலைநகரான சென்னையிலும், மீண்டும் தன் கொடியை நாட்டி உள்ளது.



latest tamil news



நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், சென்னைக்குட்பட்ட, 16 தொகுதிகளிலும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த மாதம், 6ம் தேதி நடந்த ஓட்டுப்பதிவின் போது, சென்னையில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளில் மொத்தமுள்ள, 40 லட்சத்து, 57 ஆயிரத்து, 61 வாக்காளர்களில், 23 லட்சத்து, 99 ஆயிரத்து, 381 பேர் மட்டுமே ஓட்டளித்தனர்.

அந்த வகையில், மாநிலத்திலேயே மிகக்குறைவாக, சென்னையில், 59 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகின. தொகுதி வாரியாக, ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம் மற்றும் சேப்பாக்கம் -- திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகள், ராணி மேரி கல்லுாரியில் எண்ணப்பட்டன.


latest tamil news


பெரம்பூர், கொளத்துார், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணாநகர் சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகள், லயோலா கல்லுாரியில் எண்ணப்பட்டன. விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகள், அண்ணா பல்கலையிலும் எண்ணப்பட்டன.

ஓட்டு எண்ணிக்கை துவங்கிய நேற்று, காலை, 8:00 மணி முதல், பெரும்பாலான தொகுதிகளில், தி.மு.க., கூட்டணி முன்னிலை பெற்றது. சென்னையில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, சென்னை மாவட்டத்தை முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், 10 தொகுதிகளை, தி.மு.க., கூட்டணி கைப்பற்றிய நிலையில், இம்முறை, 16 தொகுதிகளையும் வென்று, சாதனை படைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-மே-202120:38:02 IST Report Abuse
ஆப்பு படித்தவன் தி.மு.க வுக்குதான் ஓட்டுப்போடுவான்.
Rate this:
Cancel
03-மே-202116:28:58 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren Chennai people last 10 years didnt get their share in loot.Now.they voted for.the scam party for selfish benefit.
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
03-மே-202114:33:23 IST Report Abuse
முக்கண் மைந்தன் //100 ID யான்// தாமரை நாலு சீட்டுல தன சொந்த பலத்துல ஜெயிச்சிருக்கு // ... பார்ரா, ஊம் ‼️ தனீ சோலோவா நிண்டெப்ப போனவாட்டி என் சி சி Raja, கவர்னரு, இப்டீன்னு எல்லாரும் சொந்தமா கெலிச்சிருக்க வேண்டிதுதான?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X