சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அறிவாலயத்தில் கொண்டாட்டம்: தடுக்க தவறிய இன்ஸ்., 'சஸ்பெண்ட்'

Added : மே 03, 2021
Share
Advertisement
தி.மு.க., முன்னிலை வகிக்கிறது என்ற தகவல் அறிந்து, சென்னை அறிவாலயத்திற்கு, தி.மு.க., தொண்டர்கள் ஏராளமானோர், திரண்டு வந்ததால், அங்கு நடத்தப்பட்ட வெற்றி விழா, கொரோனா பரவல் நிகழ்வாக மாறும் நிலை ஏற்பட்டது. தி.மு.க., முன்னிலையில் உள்ளது என்ற தகவல்அறிந்ததும், ஆயிரம் விளக்கு தி.மு.க.,வினர், அறிவாலயத்திற்கு நேற்று காலை, 9:௦௦ மணிக்கு திரண்டு சென்றனர். எண்ணிக்கை நுாற்றுக்கணக்கில்

தி.மு.க., முன்னிலை வகிக்கிறது என்ற தகவல் அறிந்து, சென்னை அறிவாலயத்திற்கு, தி.மு.க., தொண்டர்கள் ஏராளமானோர், திரண்டு வந்ததால், அங்கு நடத்தப்பட்ட வெற்றி விழா, கொரோனா பரவல் நிகழ்வாக மாறும் நிலை ஏற்பட்டது.

தி.மு.க., முன்னிலையில் உள்ளது என்ற தகவல்அறிந்ததும், ஆயிரம் விளக்கு தி.மு.க.,வினர், அறிவாலயத்திற்கு நேற்று காலை, 9:௦௦ மணிக்கு திரண்டு சென்றனர். எண்ணிக்கை நுாற்றுக்கணக்கில் அதிகரித்தது.தொண்டர்கள், 'நிரந்தர முதல்வர் ஸ்டாலின் வாழ்க' என, கோஷம் போட்டனர்.


தொற்று பரவல்

தங்கள் கைகளில் தி.மு.க., கொடிகளையும்,வெற்றி வாசகங்கள் இடம் பெற்ற பதாகைக ளையும் ஏந்தி, ஆட்டம், பாட்டம் என, உற்சாகமாக கொண்டாடினர்.திடீரென அண்ணா சாலைக்கு சென்று, பட்டாசுகள் வெடித்தனர். இதனால், அறிவாலயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கூட்டம் அதிகரித்தது. தேர்தல் வெற்றி விழாவிற்கு தடை விதித்திருந்த, தேர்தல் கமிஷன் உத்தரவை மீறும் வகையில், தி.மு.க.,வினரின் செயல்பாடுகள் அமைந்தன.

முக கவசம் அணியாமல்,சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்ததால், அப்பகுதியில் தொற்றுபரவல் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அங்கு வந்த போலீஸ் அதிகாரி ஒருவர், 'கூட்டம் கூடாதீர்கள்; கலைந்து செல்லுங்கள்' என, எச்சரித்தார். ஆனால், போலீசாருக்கு எதிராக, தொண்டர்கள் கோஷம் எழுப்பி, போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டனர். இதற்கிடையில், அறிவாலயத்தில் கூடிய தொண்டர்களை, வீட்டிற்கு சென்று, வெற்றி விழாவை கொண்டாடச் சொல்லுங்கள் என, நிர்வாகிகளுக்கு, ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:கட்சி தொண்டர்களுக்கு, ஸ்டாலின் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கும் ஸ்டாலின், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறார்.எனவே, தொண்டர்கள் தங்கள் குடும்பத்தினருடன், வெற்றி மகிழ்ச்சியை கொண்டாடுங்கள். அறிவாலயத்தில் இருந்து உடனே கலைந்து செல்லுங்கள்; பட்டாசு வெடிக்காதீர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


வாகனம் பறிமுதல்

இருப்பினும், தொடர்ந்து தொண்டர்கள் நின்று கொண்டிருந்தனர். உடனே, தலைமை நிலைய செயலர் பூச்சி முருகன் ஓடி வந்து, 'கலைந்து செல்லாத கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்தார். இதையடுத்து, அங்கிருந்து தொண்டர்கள் கலைந்து சென்றனர்.இதற்கிடையில், முழு ஊரடங்கு தடையை மீறிய, 100க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் மீது, மூன்று பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.'வீடியோ' ஆதாரங்கள் வாயிலாக, அவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது.

தடையை மீறி செல்ல முயன்றவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு, தி.மு.க.,வினர் கொண்டாட்டத்தை தடுக்க தவறிய, தேனாம்பேட்டை, சட்டம் - - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முரளியை, 'சஸ்பெண்ட்' செய்து, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்து உள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X