அரசியல் செய்தி

தமிழ்நாடு

25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தி.மு.க., கோட்டையானது சென்னை

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில், 25 ஆண்டுகளுக்கு பின், சென்னை மாவட்ட தொகுதிகள் மீண்டும், தி.மு.க.,வின் கோட்டையாக மாறியுள்ளன.ஆளுங்கட்சியாக வெற்றி பெற்றுள்ள, தி.மு.க., சென்னையில் உருவான கட்சி. அப்போது முதல் நடந்த பல தேர்தல்களில், தி.மு.க., தான் அதிக இடங்களில் வெற்றி பெற்று வந்தது. அதனால், சென்னையை பொறுத்தவரை, தி.மு.க.,வின் கோட்டை என்றே, அரசியல் வட்டாரத்தில் கூறுவர்.இந்தக் கூற்று, 1991

சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில், 25 ஆண்டுகளுக்கு பின், சென்னை மாவட்ட தொகுதிகள் மீண்டும், தி.மு.க.,வின் கோட்டையாக மாறியுள்ளன.

ஆளுங்கட்சியாக வெற்றி பெற்றுள்ள, தி.மு.க., சென்னையில் உருவான கட்சி. அப்போது முதல் நடந்த பல தேர்தல்களில், தி.மு.க., தான் அதிக இடங்களில் வெற்றி பெற்று வந்தது. அதனால், சென்னையை பொறுத்தவரை, தி.மு.க.,வின் கோட்டை என்றே, அரசியல் வட்டாரத்தில் கூறுவர்.இந்தக் கூற்று, 1991 சட்டசபை தேர்தலில் முறியடிக்கப்பட்டது. அந்த தேர்தலில், சென்னை மாவட்டத்தில், சேப்பாக்கம், எழும்பூர் என, இரண்டு தொகுதிகளில் மட்டுமே, தி.மு.க., வெற்றி பெற்றது.

பின், 1996ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., வேட்பாளர்கள், சென்னையில் உள்ள, 14 தொகுதிகளில், 13ல் வெற்றி பெற்று, சென்னையை மீண்டும், தி.மு.க., கோட்டையாக மாற்றினர்.கடந்த, 2001 சட்டசபை தேர்தலில், சென்னையின் எட்டு தொகுதிகளில், தி.மு.க., வெற்றிக்கொடி நாட்டியது. அதன்பின், 2006ல் நடந்த சட்டசபை தேர்தலில், 14 தொகுதிகளில், ஆறு தொகுதிகளில் தி.மு.க.,வும், ஒரு தொகுதியில், அதன் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியும் வெற்றி பெற்றன.

இதன்பின், 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், சென்னையில் கொளத்துார், சேப்பாக்கம் என, இரு தொகுதிகளில் மட்டுமே, தி.மு.க., வெற்றி பெற்றது. மற்ற, 14 தொகுதிகளையும், அ.தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் பிடித்தன. 2016 தேர்தலில், சென்னையில் உள்ள, 16 தொகுதிகளில், தி.மு.க., 10 இடங்களை மட்டுமே பிடித்தது. மற்ற ஆறு இடங்களில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது.

இந்நிலையில், நேற்று நடந்த சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில், சென்னையின், 16 தொகுதிகளிலும், தி.மு.க., வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். அதாவது, 25 ஆண்டுகளுக்கு பின், சென்னை மாவட்டம் மீண்டும் தி.மு.க.,வின் கோட்டையாக மாறியுள்ளது.தி.மு.க., எப்போதெல்லாம் ஆளுங்கட்சியாக மாறுகிறதோ, அப்போதெல்லாம், சென்னையில், அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுவது வழக்கம். அதுபோலவே, இந்த தேர்தலிலும், சென்னை மாவட்ட மக்கள், தி.மு.க., வுக்கு தங்கள் அமோக ஆதரவை காட்டி, ஆளுங்கட்சியாக்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X