பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் ஜெயகுமார் தோல்வி

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னையில் உள்ள முக்கிய சட்டசபை தொகுதிகளில், ராயபுரமும் ஒன்று.மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் உள்ள இந்த தொகுதியில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் மற்றும் தி.மு.க., சார்பில், திரையரங்கு உரிமையாளர், 'ஐட்ரீம்' மூர்த்தி ஆகியோர் களம் இறங்கினர். நட்சத்திர வேட்பாளரான அமைச்சர் ஜெயகுமார், 1982ம் ஆண்டு முதல்,

சென்னையில் உள்ள முக்கிய சட்டசபை தொகுதிகளில், ராயபுரமும் ஒன்று.மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் உள்ள இந்த தொகுதியில், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் மற்றும் தி.மு.க., சார்பில், திரையரங்கு உரிமையாளர், 'ஐட்ரீம்' மூர்த்தி ஆகியோர் களம் இறங்கினர்.

நட்சத்திர வேட்பாளரான அமைச்சர் ஜெயகுமார், 1982ம் ஆண்டு முதல், அ.தி.மு.க.,விலும், ஆட்சிப்பொறுப்பிலும், சட்டசபையிலும் முக்கிய பொறுப்பு வகித்தவர். 1991 முதல் 2016 வரை, அனைத்து சட்டசபை தேர்தல்களில், ராயபுரம் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக களம் இறங்கி, 2006 தவிர, ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது, ஏழாவது முறையாக போட்டியிட்ட இவர், தோல்வி அடைந்துள்ளார். நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது, முதல் சுற்றிலிருந்தே அமைச்சர் ஜெயகுமார், அவரை எதிர்த்து போட்டியிட்ட மூர்த்தியை விட குறைவான ஓட்டுகள் பெற்று, பின்னடைவை சந்தித்தார்.

இதனால், ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள ராணி மேரி கல்லுாரியில், தனியாக அமர்ந்து, மொபைல் போனில் தேர்தல் முடிவுகளைப் பார்த்தபடி, சோகமாக இருந்தார். அதனால், அவரின் அருகில் கட்சிக்காரர்கள் யாரும் செல்லவில்லை.கடைசி சுற்று எண்ணிக்கை முடிவில் 'ஐட்ரீம்' மூர்த்தியிடம், ஜெயகுமார் ஜெயத்தை தவறவிட்டார்.

தி.மு.க., உதயமான ராயபுரம் தொகுதியில், தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வந்த ஜெயகுமாரின் தோல்வியை அடுத்து, அந்த தொகுதியில், பல ஆண்டுகளுக்குப் பின், தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X