அரசியல் செய்தி

தமிழ்நாடு

மண்டல அளவில் வீசிய அலை

Added : மே 03, 2021
Share
Advertisement
சட்டசபை தேர்தலில்,மாநில அளவில், அ.தி.மு.க.,வுக்கு எதிரான அலை வீசும் என, தெரிவிக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளை பொய்யாகி, மண்டல, மாவட்ட அளவில் தான், இரு அணிகளுக்கும் சாதக, பாதகமான அலை வீசியுள்ளது.தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, ஆளுங்கட்சிக்கு எதிராக, மாநில அளவில் அலை வீசி, எதிர்க்கட்சி கூட்டணி, 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்த வரலாறு உண்டு. நடந்து முடிந்த

சட்டசபை தேர்தலில்,மாநில அளவில், அ.தி.மு.க.,வுக்கு எதிரான அலை வீசும் என, தெரிவிக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளை பொய்யாகி, மண்டல, மாவட்ட அளவில் தான், இரு அணிகளுக்கும் சாதக, பாதகமான அலை வீசியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, ஆளுங்கட்சிக்கு எதிராக, மாநில அளவில் அலை வீசி, எதிர்க்கட்சி கூட்டணி, 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்த வரலாறு உண்டு. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு எதிராக, மாநில அளவில் அதிருப்தி அலை வீசும்.
தி.மு.க., கூட்டணி, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என, அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கிய நிறுவனமும், பல தொலைக்காட்சிகளின் கருத்துக் கணிப்புகளும் தெரிவித்தன. ஆனால், அந்த கணிப்புகள் அனைத்தும் பொய் என, இந்த தேர்தல் நிரூபித்துள்ளது. மாநில அளவில், தி.மு.க., எதிர்பார்த்த ஆதரவு அலை வீசவில்லை; அ.தி.மு.க.,க்கு எதிரான அதிருப்தி அலையும் வீசவில்லை.

அதே நேரத்தில், மாநில அளவில் வீசாத அலை, மண்டல அளவில் வீசியுள்ளது. அதாவது, அ.தி.மு.க., கூட்டணிக்கு கொங்கு மண்டலம், வடக்கு மண்டலத்தில் சாதகமான அலை வீசியுள்ளது.தி.மு.க., கூட்டணிக்கு சென்னை மண்டலம், டெல்டா மண்டலம், தென் மண்டலம் பகுதிகளில் சாதகமாக அலை வீசியுள்ளது. அதேபோல, மாவட்ட அளவில் சில தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., என, சரிசமமாக கைப்பற்றியுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X