பொது செய்தி

தமிழ்நாடு

பழுதான கருவியிலும் உதயநிதி முன்னிலை

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை, சேப்பாக்கம் - -திருவல்லிக்கேணி தொகுதிக்கான, மின்னணு ஓட்டு கருவிகளில், மூன்று பழுதாயின. அதனால், அவை, தனியே வைக்கப்பட்டன. கருவிகளை சரி செய்யும் பணியில், 'பெல்' நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர். என்றாலும், ஒரு கருவி மட்டுமே சரி செய்யப்பட்டு, ஓட்டுகள் எண்ணப்பட்டன.மற்றவை தனியாக எடுத்து வைக்கப்பட்டன. 25 சுற்று ஓட்டு எண்ணிக்கைக்குப் பின், தி.மு.க., வேட்பாளர் உதயநிதி, 68

சென்னை, சேப்பாக்கம் - -திருவல்லிக்கேணி தொகுதிக்கான, மின்னணு ஓட்டு கருவிகளில், மூன்று பழுதாயின. அதனால், அவை, தனியே வைக்கப்பட்டன.

கருவிகளை சரி செய்யும் பணியில், 'பெல்' நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர். என்றாலும், ஒரு கருவி மட்டுமே சரி செய்யப்பட்டு, ஓட்டுகள் எண்ணப்பட்டன.மற்றவை தனியாக எடுத்து வைக்கப்பட்டன. 25 சுற்று ஓட்டு எண்ணிக்கைக்குப் பின், தி.மு.க., வேட்பாளர் உதயநிதி, 68 ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னணி வகித்தார். அப்போது தேர்தல் அதிகாரி, தி.மு.க., தலைமை முகவர் ஜின்னாவிடம், பழுதான கருவிகளின் ஓட்டுகளை எண்ணுவது குறித்து ஆலோசித்தார். பின், இரண்டு, 'விவிபேடில்' உள்ள பிரின்ட் சீட்டுகள் எண்ணப்பட்டன. ஒன்றில், 290ம், மற்றொன்றில், 372 பிரின்ட்களும் இருந்தன. அவற்றில், பா.ம.க., வேட்பாளருக்கு, 37 மற்றும் 31 ஓட்டுகள் கிடைத்திருந்தன. அதேநேரம், 224 மற்றும் 320 ஓட்டுகள் கிடைத்ததால், தி.மு.க., வேட்பாளர் உதயநிதி முன்னிலை வகித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X