கோர்ட் செய்தி

தமிழ்நாடு

லஞ்ச வழக்கில் தண்டனை பெற்றவர் நீக்கம் கமிஷனர் முடிவில் குறுக்கிட ஐகோர்ட் மறுப்பு

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:லஞ்ச வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட, சுகாதார ஆய்வாளரை பணி நீக்கம் செய்த உத்தரவில் குறுக்கிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.கடலுார் மாவட்டத்தில், சுகாதார ஆய்வாளராக ஆரோக்கியசாமி என்பவர் பணியாற்றினார். லஞ்சம் வாங்கியதாக, இவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அதனால், பணியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். லஞ்ச வழக்கில், இவருக்கு

சென்னை:லஞ்ச வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட, சுகாதார ஆய்வாளரை பணி நீக்கம் செய்த உத்தரவில் குறுக்கிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கடலுார் மாவட்டத்தில், சுகாதார ஆய்வாளராக ஆரோக்கியசாமி என்பவர் பணியாற்றினார். லஞ்சம் வாங்கியதாக, இவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அதனால், பணியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். லஞ்ச வழக்கில், இவருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதித்து, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஆரோக்கியசாமி மேல்முறையீடு செய்தார்.

தண்டனையை நிறுத்தி வைத்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், ஆரோக்கியசாமிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்பட்டது. அவரும் விளக்கம் அளித்தார். அதை தொடர்ந்து, அவரை பணி நீக்கம் செய்து, 2020 ஏப்ரலில், நகராட்சி நிர்வாக கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார்.இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஆரோக்கியசாமி மனு தாக்கல் செய்தார்.

தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை பரிசீலிக்காமல், தனக்கு சந்தர்ப்பமும் அளிக்காமல், பணி நீக்க உத்தரவு பிறப்பித்திருப்பதாக முறையிட்டார்.மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: குற்றவாளி என தீர்ப்பு அளித்ததன் அடிப்படையில், பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அதற்கான அதிகாரம், நகராட்சி நிர்வாக கமிஷனருக்கு உள்ளது. தண்டனையை நிறுத்தி வைத்ததால், வழக்கில் இருந்து விடுதலையாகி விட்டார் என, அர்த்தம் கொள்ளக் கூடாது.

எனவே, பணி நீக்க உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை.ஊழல் அதிகாரிகள், ஊழியர்களுக்கு எதிராக துறை நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடக்கூடாது.அரசு துறைகளில் திறமை வாய்ந்த ஊழியர்கள் பலர், தற்காலிக அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு, சொற்ப தொகையே வழங்கப்படுகிறது.

மனுதாரர், 2,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக, வழக்கில் கூறப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக துறை நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், ஆவணங்கள் இல்லை என, காரணம் காட்டி, விசாரணையை நிறுத்தக் கூடாது.சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை பெற்று, விசாரணையை நடத்த வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X