பொது செய்தி

தமிழ்நாடு

தென்சென்னை தொகுதிகளில் திமுக வெற்றி

Added : மே 03, 2021
Share
Advertisement
மாலை வரை 'திக்திக்' தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதியாக விளங்கும் சோழிங்கநல்லுாரில், இம்முறை, தி.மு.க., சார்பில், சிட்டிங் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் மற்றும் அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மாவட்ட செயலருமான, கே.பி.கந்தன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில், நேற்று காலை ஓட்டுகள் எண்ண ஆரம்பித்ததில் இருந்து, சுற்றுக்களின் அடிப்படையில், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும்

மாலை வரை 'திக்திக்' தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதியாக விளங்கும் சோழிங்கநல்லுாரில், இம்முறை, தி.மு.க., சார்பில், சிட்டிங் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் மற்றும் அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மாவட்ட செயலருமான, கே.பி.கந்தன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை ஓட்டுகள் எண்ண ஆரம்பித்ததில் இருந்து, சுற்றுக்களின் அடிப்படையில், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் மாறி மாறி முன்னிலை வகித்தன.நேற்று மதியம் வரை இந்நிலை தொடர்ந்தது. மாலையில், தி.மு.க., வெற்றியை நோக்கி நகர ஆரம்பித்தது. இறுதியில், தி.மு.க., வேட்பாளர் அரவிந்த் ரமேஷ் வெற்றி பெற்றார். ஆலந்துாரை மடக்கிய தி.மு.க.,தமிழகத்தில், மாபெரும் அரசியல் சக்தியாக திகழ்ந்த, எம்.ஜி.ஆரை உருவாக்கிய பெருமை, ஆலந்துார் தொகுதிக்கு உண்டு. இத்தொகுதியில், கடந்த முறை தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பரசன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார்.இம்முறை மீண்டும் அவர் தி.மு.க., சார்பில் போட்டியிட்டார். அ.தி.மு.க., சார்பில், இதே தொகுதியில் முன்பு வெற்றி பெற்று அமைச்சராக இருந்த, வளர்மதி களம் இறக்கப்பட்டார்.நேற்று காலை ஓட்டுகள் எண்ண ஆரம்பித்தில் இருந்து, அன்பரசன் படிப்படியாக வெற்றி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். ஒவ்வொரு சுற்றிலும் அவருக்கு ஓட்டு சதவீதம் உயர்ந்தது. இறுதியில், தி.மு.க., வேட்பாளர் அன்பரசன் வென்றார்.வேளச்சேரியில் காங்., வெற்றிவேளச்சேரி தொகுதியில், கடந்த முறை தி.மு.க., சார்பில் போட்டியிட்ட நடிகர் வாகை சந்திரசேகர் வெற்றி பெற்றார்.இம்முறை தி.மு.க., போட்டியிடாமல், அதன் கூட்டணி கட்சியான காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன் சார்பில் ஹசன்மவுலானா போட்டியிட்டார். அ.தி.மு.க., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், கட்சியின் மாவட்ட செயலருமான அசோக் போட்டியிட்டார்.நேற்று காலை ஓட்டுகள் எண்ண ஆரம்பித்ததில் இருந்து, ஹசன் மவுலானா முன்னணியில் இருந்தார். இடையில் சில சுற்றுக்கள் அசோக் முன்னிலை வகித்தார். அதன் பின், ஹசன் மவுலானா ஏறுமுகத்தில் இருந்தார். இறுதியில், காங்., வேட்பாளர் வெற்றி பெற்றார்.

சைதையில் மா.சு., வெற்றி வி.ஐ.பி., தொகுதியாக விளக்கும் சைதாப்பேட்டையில், அ.தி.மு.க., - தி.மு.க., என இரு கட்சிகளும், மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன.கடந்த முறை சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை, மீண்டும் அவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் சென்னை மாநகர முன்னாள் மேயரும், தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான துரைசாமி போட்டியிட்டார்.முன்னாள் மேயர்கள் மோதுவதால் பிரசாரம் பரபரப்பாக இருந்தது. நேற்று காலை ஓட்டுகள் எண்ண ஆரம்பித்ததில் இருந்து, தொடர்ந்து ஒவ்வொரு சுற்றிலும், மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.சிட்டிங் எம்.எல்.ஏ.,வுக்கு சாதகம்தாம்பரம் தொகுதியில், தி.மு.க.,வை சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ., - எஸ்.ஆர்.ராஜா மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் சின்னய்யா போட்டியிட்டார்.ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல், தி.மு.க., வேட்பாளர், எஸ்.ஆர். ராஜா முன்னிலையில் இருந்தார். சில சுற்றுகளில், அ.தி.மு.க., வேட்பாளர் முன்னிலைக்கு வந்தாலும், அதன்பின் வந்த, அனைத்து சுற்றுகளிலும் தி.மு.க., வேட்பாளர் முன்னிலை வகித்தார்.பல்லாவரத்திலும் வெற்றிபல்லாவரம் தொகுதியில், தி.மு.க., சார்பில் தற்போதைய, எம்.எல்.ஏ., இ.கருணாநிதி மீண்டும் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து, அ.தி.மு.க., சார்பில், முன்னாள் எம்.பி.,யும், கட்சியின் மாவட்ட செயலருமான சிட்லபாக்கம் ராஜேந்திரன் போட்டியிட்டார். ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல், தி.மு.க.,வே முன்னிலையில் இருந்து வந்தது.மாலை நேர சுற்றுகளின் முடிவின் படி, இ.கருணாநிதி, 15 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்துடன் வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தார்.அமைச்சர் 'அப்செட்'தொகுதி மறுசீரமைப்பின் போது, 2011ல் ஆவடி சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில், 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் பாண்டியராஜன் போட்டியிட்டு, 39.92 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து அமைச்சர் பதவியும் அவரை தேடி வந்தது. தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சா.மு.நாசர், 1,395 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறையும், அதே இரு வேட்பாளர்கள் மீண்டும் களம் கண்டனர். அ.தி.மு.க.,வே மூன்றாவது முறையும் இத்தொகுதியை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் சுற்றில் இருந்தே, தி.மு.க., முன்னிலை வகித்தது. முடிவில், 1 லட்சத்து, 47 ஆயிரத்து, 623 ஓட்டுகளுடன், நாசர் வெற்றி பெற்றார். 93 ஆயிரத்து, 689 ஓட்டுகள் பெற்று, அமைச்சர் பாண்டியராஜன் தோல்வி அடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X