பொது செய்தி

தமிழ்நாடு

3 நாட்களுக்கு மழை வாய்ப்பு

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடக்கு உள் கர்நாடகா முதல் குமரி வரை, 1 கி.மீ., உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், வரும், 6ம் தேதி வரை மிதமான மழைக்கு

சென்னை:தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடக்கு உள் கர்நாடகா முதல் குமரி வரை, 1 கி.மீ., உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், வரும், 6ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், பிளவக்கல், வத்திராயிருப்பில், 7 செ.மீ., மழை பதிவானது. எருமைப்பட்டி, ஆத்துார், கீரனுார், வால்பாறை, தொண்டி, 3; விருதுநகர், சாத்துார், உத்தமபாளையம், ஊட்டி, பேச்சிப்பாறையில், 2 செ.மீ., மழை பெய்துள்ளது.மாநிலத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தி மற்றும் திருச்சியில், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. கொடைக்கானல், 19; ஊட்டி, 22; வால்பாறை, 27; சென்னை, நாகை, பாம்பன், புதுச்சேரி, 35; தர்மபுரி, 36; கோவை, கடலுார், வேலுார், 37; மதுரை, சேலம், 38 டிகிரி செல்ஷியசாக வெப்பநிலை நிலவியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X