புதுச்சேரியில் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி ஆட்சி

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைகிறது. ஆளுங்கட்சியாக இருந்த காங். வெறும் இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.புதுச்சேரியில் காங். - தி.மு.க. கூட்டணி ஆட்சி முடியும் தருவாயில் ஆளுங்கட்சி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து பா.ஜ.வில் ஐக்கியமாகினர். இதனால் மெஜாரிட்டியை இழந்த நாராயணசாமி தலைமையிலான காங். அமைச்சரவை
N Rangaswamy, AINRC, BJP

புதுச்சேரி : புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைகிறது. ஆளுங்கட்சியாக இருந்த காங். வெறும் இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

புதுச்சேரியில் காங். - தி.மு.க. கூட்டணி ஆட்சி முடியும் தருவாயில் ஆளுங்கட்சி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து பா.ஜ.வில் ஐக்கியமாகினர். இதனால் மெஜாரிட்டியை இழந்த நாராயணசாமி தலைமையிலான காங். அமைச்சரவை கவிழ்ந்தது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதிகள். 10 லட்சத்து 4507 வாக்காளர்களுக்கு 1558 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஏப். 6ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. 81.64 சதவீதம் ஓட்டு பதிவானது.காங். - தி.மு.க., கூட்டணியில் காங். 15 தொகுதிகளை பெற்றது. ஏனாம் தொகுதியில் போட்டியிட வேட்பாளர் இல்லாததால் 14 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிட்டது. தி.மு.க. - 13 வி.சி. மற்றும் இந்திய கம்யூ. கட்சி தலா ஒரு தொகுதியில் போட்டியிட்டன.

என்.ஆர்.காங். - பா.ஜ. - அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங். -16 ;பா.ஜ. - 9 அ.தி.மு.க. - 5 தொகுதியில் போட்டியிட்டன. மொத்தமுள்ள 30 தொகுதியில் 16 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனித்து ஆட்சி அமைக்கலாம். ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கி இரவு 11:00க்கு முடிந்தது. புதுச்சேரியில் மூன்று இடங்களிலும் காரைக்காலில் இரண்டு மாகி ஏனாமில் தலா ஒரு மையத்திலும் ஓட்டு எண்ணும் பணி நடந்தது.

என்.ஆர்.காங். கட்சி 10 தொகுதிகளிலும் பா.ஜ. ஆறு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளதால் புதுச்சேரியில் என்.ஆர்.காங். - பா.ஜ. கூட்டணி ஆட்சி அமைகிறது.


latest tamil news



என்.ஆர்.காங்.,


என்.ஆர்.காங். வேட்பாளர்கள் 16 இடங்களில் போட்டியிட்டனர். இதில் தேனி ஜெயக்குமார் - மங்கலம் ரமேஷ் - கதிர்காமம் லட்சுமிகாந்தன் - ஏம்பலம் சந்திரபிரியங்கா - நெடுங்காடு திருமுருகன் - காரைக்கால் வடக்கு ராஜவேலு - நெட்டப்பாக்கம் ஆறுமுகம் - இந்திரா நகர் தட்சிணாமூர்த்தி - அரியாங்குப்பம் என்.ஆர்.ரங்கசாமி - தட்டாஞ்சாவடி லட்சுமிநாராயணன் - ராஜ்பவன் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

ஏனாம் தொகுதியிலும் போட்டியிட்ட ரங்கசாமி அங்கு தோல்வியடைந்தார்.வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அப்பா பைத்தியம் சுவாமி கோவிலில் இருந்த என்.ஆர்.காங். கட்சி தலைவர் ரங்கசாமியை சந்தித்து ஆசி பெற்றனர்.


பா.ஜ.,


என்.ஆர்.காங். கூட்டணியில் பா.ஜ. ஒன்பது இடங்களில் போட்டியிட்டது. இதில் நமச்சிவாயம் - மண்ணாடிப்பட்டு ஜான்குமார் - காமராஜ் நகர் ரிச்சர்ட் ஜான்குமார் - நெல்லித்தோப்பு செல்வம் - மணவெளி கல்யாணசுந்தரம் - காலாப்பட்டு சாய் சரவணக்குமார் - ஊசுடு ஆகிய ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது.


2ல் சுருண்ட காங்.


கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் காங். 15 இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க. துணையுடன் ஆட்சி அமைத்தது. இந்த முறையும் காங். கட்சி 15 இடங்களில் போட்டியிட்டது. ஆட்சியாளர்கள் மீது மக்கள் மீதான அதிருப்தி காரணமாக மாகியில் ரமேஷ்பரம்பத் லாஸ்பேட்டை காங். வேட்பாளர் வைத்தியநாதன் ஆகியோர் மட்டுமே வெற்றி பெற்றனர். மற்ற அனைத்து இடங்களிலும் காங்.. வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-மே-202101:17:30 IST Report Abuse
தமிழவேல் காங்கிரஸுல இருந்தவங்கதானே அதுல இப்போ இருக்கிறது ?
Rate this:
Cancel
Kaliraj N -  ( Posted via: Dinamalar Android App )
03-மே-202118:23:07 IST Report Abuse
Kaliraj N ரொம்ப பீத்திக்காதீங்க இன்னும் மூனு மாசத்திலேயே ரெங்காவுக்கு ஆப்பு...
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
03-மே-202116:34:08 IST Report Abuse
Sivaraman உங்கள் ஆட்சி சிறப்பானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X