அரசியல் செய்தி

தமிழ்நாடு

விறுவிறு ஓட்டு எண்ணிக்கை; பரபரப்பான களம்

Added : மே 03, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லுாரியில், நான்கு தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது.இதில், உத்திரமேரூர் தொகுதியின் ஓட்டு விபரங்கள் மட்டும், மிகவும் தாமதமாகவே வழங்கப்பட்டன.காரணம், உத்திரமேரூர் தொகுதி, இரண்டாவது ஓட்டு எண்ணும் அறையில் அமைக்கப்பட்ட மேஜைகளில், 16வது மேஜையில், முதல் சுற்றிலேயே மின்னணு
 விறுவிறு ஓட்டு எண்ணிக்கை; பரபரப்பான களம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலை இன்ஜினியரிங் கல்லுாரியில், நான்கு தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது.

இதில், உத்திரமேரூர் தொகுதியின் ஓட்டு விபரங்கள் மட்டும், மிகவும் தாமதமாகவே வழங்கப்பட்டன.காரணம், உத்திரமேரூர் தொகுதி, இரண்டாவது ஓட்டு எண்ணும் அறையில் அமைக்கப்பட்ட மேஜைகளில், 16வது மேஜையில், முதல் சுற்றிலேயே மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரம் பழுதானது. மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரத்திற்கான பொறியாளரை வரவழைத்து, இயந்திரம் சரி செய்யப்பட்டது.l கல்லுாரி கட்டடத்திற்கு உள்ளேயும், வெளியேயும், 980 போலீசாரும், 150 துணை ராணுவ வீரர்களும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஓட்டு எண்ணும் கல்லுாரிக்கு வந்த அரசியல் கட்சியினர், நிருபர்கள், அரசு ஊழியர்களுக்கு சானிடைசர், கையுறை, முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டனl ஓட்டு எண்ணும் மையத்தில், மொபைல் போன், தண்ணீர் கேன், தின்பண்டங்கள் போன்ற பொருட்களை எடுத்து செல்லக்கூடாது என, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. காஞ்சிபுரம் ஓட்டு எண்ணும் மையத்தில், அரசு ஊழியர்கள் சிலர், வெந்நீர் பாட்டில்களை எடுத்து சென்றபோது, அவற்றை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால், இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுl கொரோனா பரிசோதனை செய்துக் கொண்டவர்களுக்கு, ஓட்டு எண்ணும் மையத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அரசு ஊழியர்கள், நிருபர்கள் எடுத்துச்சென்ற கொரோனா தடுப்பூசி சான்று உள்ளிட்டவற்றை கூட, அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எந்த சரிபார்ப்பும் இன்றி, அடையாள அட்டை மட்டும் பார்த்து, அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.செங்கல்பட்டு மாவட்டம்l செங்கல்பட்டு, திருப்போரூர் தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் மையம், திருக்கழுக்குன்றம் அருகே, தண்டரை ஆசான் நினைவு பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டது. இங்கு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்து, அவற்றை ஓட்டு எண்ணும் அறைகளுக்கு எடுத்து வரவும், மீண்டும் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லவும், தனித்தனி வழிகள் அமைக்கப்பட்டிருந்தனl மதுராந்தகம், செய்யூர் தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையம், நெல்வாய் கிராமத்தில், தனியார் பொறியியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டது. முதல் சுற்றில், வி.சி., இரண்டாம், மூன்றாம் சுற்றுகளில், அ.தி.மு.க., என, முன்னிலை வகித்தன. அடுத்தடுத்த சுற்றுகளில், இவை மாறி மாறி வந்து, பரபரப்பை ஏற்படுத்தியதுl செய்யூர் தொகுதிக்கான ஓட்டு எண்ணும் மையத்தில், முதல் சுற்று, ஏழாம் மேஜையில், ஓட்டுப்பதிவு இயந்திர பேட்டரி பழுதாகி, பின் சரிசெய்யப்பட்டு, எண்ணிக்கை துவங்கியதுl ஐந்தாம் சுற்றில், '42ஏ' ஓட்டுச்சாவடி இயந்திரத்தில், இயந்திர பதிவு ஓட்டுகள், 208 பதிவாகி, இதற்கான, '17சி' படிவத்தில், 268 ஓட்டுகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்காலிகமாக, இச்சாவடி எண்ணிக்கை நிறுத்தி, பின், படிவத்தில் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததை, தேர்தல் அலுவலர் சீதா விளக்கியதும், ஓட்டு எண்ணப்பட்டது

தொடர்ந்து, எட்டாவது மேஜையில், ஒட்டு மொத்த எண்ணிக்கை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டு தீர்க்கப்பட்டது.l நெல்வாய் ஓட்டு எண்ணிக்கை மையத்தில், காலை உணவு முறையாக வழங்கப்படாததால், உணவு வாங்க, அரசு ஊழியர்கள் மற்றும் முகவர்கள் முண்டியடித்தனர். மதிய உணவும், உரிய நேரத்தில் வழங்கப்படாததால்,13ம் சுற்று ஓட்டு எண்ணிக்கைதாமதமாக துவங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X