பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சியில் தி.மு.க., பெருவாரியாக வெற்றி

Added : மே 03, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு தொகுதிகள் உள்ளன.ஆலந்துார் தொகுதியை பொறுத்தவரையில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அன்பரசன், ஆலந்துார் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இத்தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி, முன்னாள் அமைச்சர். இருவருக்கும், கடும் போட்டி இருந்தது.இருப்பினும், முதல் சுற்றில் இருந்தே, அன்பரசன், கூடுதல் ஓட்டுகளை

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு தொகுதிகள் உள்ளன.ஆலந்துார் தொகுதியை பொறுத்தவரையில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட அன்பரசன், ஆலந்துார் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இத்தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி, முன்னாள் அமைச்சர். இருவருக்கும், கடும் போட்டி இருந்தது.இருப்பினும், முதல் சுற்றில் இருந்தே, அன்பரசன், கூடுதல் ஓட்டுகளை பெற்று வந்தார். ஒன்பதாவது சுற்றில், வளர்மதியைவிட, அன்பரசன், 19 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். அப்போதே, அன்பரசன் வெற்றி பெறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் தெரிந்தது. இதை பார்த்து, அ.தி.மு.க., முகவர்கள் சலிப்படைந்தனர். இறுதியாக, 21வது சுற்றில், அன்பரசன் வெற்றி பெற்றார்.ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில், அ.தி.மு.க., பழனி, காங்., செல்வபெருந்தகை என, இருவருமே, 2016ல் போட்டியிட்டவர்கள். மீண்டும், இம்முறை இருவரும் போட்டியிட்டதால், யார் வெற்றி பெறுவர் என, எதிர்பார்ப்பு நிலவியது.முதல் ஐந்து சுற்றுகள் வரை, அ.தி.மு.க., வேட்பாளர் பழனி, முன்னிலை வகித்தார். பின், ஒவ்வொரு சுற்றிலுமே, காங்.,கின் செல்வபெருந்தகை முன்னிலை வகித்தார். தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த செல்வபெருந்தகை, 19வது சுற்றில் வெற்றியடைந்தார்.காஞ்சிபுரம் தொகுதியில், தி.மு.க., சார்பில் எழிலரசனும், பா.ம.க., சார்பில் மகேஷ்குமாரும் போட்டியிட்டனர். முதல் இரு சுற்று மட்டுமே, பா.ம.க., வேட்பாளர் மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். பின், அனைத்து சுற்றிகளிலுமே, தி.மு.க., வேட்பாளர் எழிலரசன் முன்னிலையில் இருந்தார். தொடர்ச்சியாக, 16வது சுற்றில், எழிலரசன் வெற்றி பெற்றார்.உத்திரமேரூர் தொகுதியில், ஏழாவது முறையாக தி.மு.க., வேட்பாளர் சுந்தர் போட்டியிட்டார். அ.தி.மு.க., சார்பில், மூன்றாவது முறையாக, முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் போட்டியிட்டார்.முதல் சுற்றிலிருந்து, 10வது சுற்று வரை, சோமசுந்தரம் முன்னிலை வகித்து வந்தார். இருப்பினும், சுந்தருக்கும், சோமசுந்தரத்துக்கும் இடையே, 1,000, 2,000 ஓட்டுகள் மட்டுமே வித்தியாசம். 11வது சுற்றில், சுந்தர் முன்னிலை வகித்தார்.பின், 12வது சுற்றில், 279வது ஓட்டுச்சாவடிக்கான கட்டுப்பாட்டு இயந்திரம் பழுதானது. இயந்திரத்தை சரிசெய்ய முடியாததால், அதைவிடுத்து, மற்ற இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை கூட்டி, சுற்று முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், சோமசுந்தரத்தைவிட, 91 ஓட்டுகள் மட்டுமே, சுந்தர் கூடுதலாக பெற்றிருந்தார்.பழுதான இயந்திரத்திற்கு பதிலாக, 'விவிபிஏடி' இயந்திரத்தில் விழுந்த ஓட்டுகளை எண்ணி முடிவுகளை தெரிவிக்கும் பணியில், அதிகாரிகள்ஈடுபட்டிருந்தனர். மேலும், தபால் ஓட்டு விபரங்கள் கூட்டி முடிவுகளை அறிவிக்கும் முன், இருவரிடையே பெரும் இழுபறியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X