பொற்கால ஆட்சி: வைகோ வாழ்த்து| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொற்கால ஆட்சி: வைகோ வாழ்த்து

Added : மே 03, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை:'தி.மு.க.,வின் பொற்கால ஆட்சி மலர்கிறது; தமிழக வாக்காள பெருமக்களுக்கு நன்றி' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.அவரது அறிக்கை:திராவிட இயக்கத்தை, நம் அன்னை தமிழை, கப்பி இருந்த காரிருள் நீங்கி, உதயசூரியன் ஒளியுடன், தமிழகத்திற்கு விடிவு பிறந்துள்ளது.வெற்றியை தவிர வேறு இல்லை என, திராவிட இயக்க உணர்வாளர்கள் பூரித்து மகிழ்கின்றனர். ஸ்டாலின் தலைமையில்,

சென்னை:'தி.மு.க.,வின் பொற்கால ஆட்சி மலர்கிறது; தமிழக வாக்காள பெருமக்களுக்கு நன்றி' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:திராவிட இயக்கத்தை, நம் அன்னை தமிழை, கப்பி இருந்த காரிருள் நீங்கி, உதயசூரியன் ஒளியுடன், தமிழகத்திற்கு விடிவு பிறந்துள்ளது.வெற்றியை தவிர வேறு இல்லை என, திராவிட இயக்க உணர்வாளர்கள் பூரித்து மகிழ்கின்றனர். ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.,வின் பொற்கால ஆட்சி மலர்கிற நிலை உருவாகி இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்.

வெற்றிகள் தொடரட்டும்: பணிகள் துவங்கட்டும்; தொடர்ந்து நிகழட்டும்; புதிய வரலாறு படைக்கட்டும் என, இந்த பொன்னான வேளையில், ஸ்டாலினுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.நீங்கள் எடுக்கிற முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ம.தி.மு.க., உறுதுணையாக இருக்கும். ஆட்சி மாற்றத்திற்கு ஓட்டு அளித்த வாக்காளர்களுக்கு நன்றி.இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X