அரசியல் செய்தி

தமிழ்நாடு

தோல்வியை தழுவிய பா.ஜ., புது வரவுகள்

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:பா.ஜ.,வில் சேர்ந்த உடனேயே, சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' கொடுக்கப் பட்ட மூன்று பேரும், தோல்வியை தழுவினர். காங்கிரஸ் கட்சியில், செய்தி தொடர்பாளராக வலம் வந்தவர், நடிகை குஷ்பு; மத்திய அரசை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கேற்று, ஆவேசமாக பேசிய சில நாட்களில், பா.ஜ.,வில் இணைந்தார். இந்த தேர்தலில், சென்னை - ஆயிரம்விளக்கு தொகுதி, அவருக்கு ஒதுக்கப்பட்டது.

சென்னை:பா.ஜ.,வில் சேர்ந்த உடனேயே, சட்டசபை தேர்தலில் போட்டியிட, 'சீட்' கொடுக்கப் பட்ட மூன்று பேரும், தோல்வியை தழுவினர். காங்கிரஸ் கட்சியில், செய்தி தொடர்பாளராக வலம் வந்தவர், நடிகை குஷ்பு; மத்திய அரசை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கேற்று, ஆவேசமாக பேசிய சில நாட்களில், பா.ஜ.,வில் இணைந்தார்.

இந்த தேர்தலில், சென்னை - ஆயிரம்விளக்கு தொகுதி, அவருக்கு ஒதுக்கப்பட்டது. கர்நாடகாவில், ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை; பதவியை துறந்து, பா.ஜ.,வில் இணைந்தார். அவருக்கு, அரவக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்த, மதுரையைச் சேர்ந்த டாக்டர் சரவணன், கூட்டணி கட்சிக்கு தொகுதி மாறியதும், தி.மு.க.,வில் இருந்து விலகினார். பா.ஜ.,வில் இணைந்த உடனேயே, மதுரை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது.

பா.ஜ.,வுக்கு புது வரவான இந்த மூன்று பேருக்கும், அவரவர் முக்கியத்துவம் கருதி, கட்சியில் சேர்ந்த உடனேயே, தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டது. ஆனால், மூவரும் தோல்வியை தழுவியுள்ளனர். அதேநேரத்தில், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் சேர்ந்த மார்கண்டேயனுக்கு, விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட, சீட் வழங்கப்பட்டது. 37 ஆயிரத்து, 893 ஓட்டுகள் வித்தியாசத்தில், இவர் வெற்றி பெற்றுள்ளார்.

அ.தி.மு.க.,வில், எம்.பி.,யாக பதவி வகித்த, விழுப்புரம் லட்சுமணனுக்கும், தி.மு.க.,வில் சேர்ந்த உடனேயே, 'சீட்' வழங்கப்பட்டது, அமைச்சர் சி.வி.சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்ட இவர், வெற்றி பெற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X