சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் கொரோனா தொற்றால், நேற்று ஒரே நாளில், 20 ஆயிரத்து, 768 பேர் பாதிக்கப்பட்டனர். இறப்பு எண்ணிக்கையும், 153 பேராக உயர்ந்துள்ளது.இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 265 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், 1.43 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 20 ஆயிரத்து, 768 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில், 6,078; செங்கல்பட்டில், 1,582; கோவையில்,

சென்னை:தமிழகத்தில் கொரோனா தொற்றால், நேற்று ஒரே நாளில், 20 ஆயிரத்து, 768 பேர் பாதிக்கப்பட்டனர். இறப்பு எண்ணிக்கையும், 153 பேராக உயர்ந்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 265 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில், 1.43 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 20 ஆயிரத்து, 768 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில், 6,078; செங்கல்பட்டில், 1,582; கோவையில், 1,441; திருவள்ளூரில், 1,049 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை, 2.29 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டதில், 12 லட்சத்து, 7,112 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். அவர்களில் சிகிச்சை முடித்து, நேற்று, 17 ஆயிரத்து, 576 பேர் உட்பட, 10 லட்சத்து, 72 ஆயிரத்து, 322 பேர் வீடு திரும்பிஉள்ளனர்.

தற்போது, சென்னையில், 31 ஆயிரத்து, 913; செங்கல்பட்டில், 8,866; கோவையில், 7,683 பேர் என, மாநிலம் முழுதும், ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 444 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றால் நேற்று, 153 பேர் உட்பட, 14 ஆயிரத்து, 346 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X