பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் கமிஷன் சுணக்கம் பொதுமக்கள் ஏமாற்றம்

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:தேர்தல் முடிவுகளை உடனுக்குடன், இணைய தளத்தில் வெளியிட முடியாமல், தேர்தல் அதிகாரிகள் திணறியதால், இணையதளத்தில் முடிவுகளை அறிய முடியாமல், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.சட்டசபை தேர்தல் முடிவுகளை, https://results.eci.gov.in மற்றும் https://elections.tn.gov.in என்ற இணையதளத்தில், பொதுமக்கள் பார்வையிடலாம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருந்தார்.அதன்படி, நேற்று காலையில்

சென்னை:தேர்தல் முடிவுகளை உடனுக்குடன், இணைய தளத்தில் வெளியிட முடியாமல், தேர்தல் அதிகாரிகள் திணறியதால், இணையதளத்தில் முடிவுகளை அறிய முடியாமல், மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சட்டசபை தேர்தல் முடிவுகளை, https://results.eci.gov.in மற்றும் https://elections.tn.gov.in என்ற இணையதளத்தில், பொதுமக்கள் பார்வையிடலாம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருந்தார்.அதன்படி, நேற்று காலையில் இருந்து இணைய தளத்தில், கட்சிகள் முன்னிலை விபரம், சட்டசபை பொதுத் தேர்தல் நடந்த, ஐந்து மாநிலங்களுக்கும், இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளுக்கும் வெளியிடப்பட்டன.

ஒவ்வொரு தொகுதியிலும், வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விபரம், உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படவில்லை. பல தொகுதிகளில், 10 ரவுண்டு ஓட்டு எண்ணிக்கை முடிந்த நிலையில், முதல் ரவுண்டு ஓட்டு எண்ணிக்கை, பதிவேற்றம் செய்யப்பட்டது.தொகுதி முன்னிலை விபரத்தில், 2016ம் ஆண்டு முடிவுகள் இடம் பெற்றிருந்தன; இந்த தேர்தல் முடிவுகள் இடம் பெறவில்லை. இதன் காரணமாக, இணையதளத்தில் தேர்தல் முடிவுகளை பார்த்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X