அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்போம்: பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அறிவிப்பு

Added : மே 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'தமிழகத்தில், புதிய அரசுக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் ஒத்துழைப்பு அளிப்போம்' என, தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாழ்த்துகள். மக்களின் முடிவை பா.ஜ., ஏற்கிறது. நாங்கள் புதிய அரசுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் ஒத்துழைப்போம்.பா.ஜ., தொண்டர்கள்
 புதிய அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்போம்: பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அறிவிப்பு

சென்னை:'தமிழகத்தில், புதிய அரசுக்கும், மாநிலத்தின் வளர்ச்சிக்கும் ஒத்துழைப்பு அளிப்போம்' என, தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாழ்த்துகள். மக்களின் முடிவை பா.ஜ., ஏற்கிறது. நாங்கள் புதிய அரசுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் ஒத்துழைப்போம்.பா.ஜ., தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். ஆனால், துரதிருஷ்டவசமாக, நாங்கள் எதிர்பார்த்த அளவு, அதை ஓட்டுகளாக மாற்ற முடியவில்லை.

தமிழகத்தில் பா.ஜ., கணக்கை துவக்கி உள்ளது. தமிழக மக்களுக்காக கடுமையாக உழைப்போம். தேர்தலில் ஒத்துழைப்பு அளித்த, முதல்வர் இ.பி.எஸ்., - துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மற்றும் அ.தி.மு.க., தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, தமிழகத்தில் ஸ்டாலின், கேரளாவில் பினராயி விஜயன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போது ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது, யாரும் புகார் கூற மாட்டார்கள் என்று நம்புகிறேன். எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால், ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து யாரும் பேசுவதுஇல்லை.தமிழகம் முழுதும் செல்லவும், தமிழக மக்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்பு கிடைத்தது; மக்கள் நன்கு வரவேற்றனர். அவர்களின் மகன் மற்றும் சகோதரனாக என்னை பாவித்தனர்.அசாமில் பா.ஜ., ஆட்சியை தக்க வைத்துள்ளது. புதுச்சேரியில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. அங்குள்ள தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு வாழ்த்துகள்.

மேற்கு வங்கத்தில், 2016 தேர்தலில், மூன்று இடங்களில் வெற்றி பெற்றோம். இம்முறை, 80க்கும் மேற்பட்ட இடங்களை, மம்தா பானர்ஜி மற்றும் அவரது கட்சியினரின் வன்முறைக்கு இடையே பெற்றுள்ளோம்.பிரதமர் மோடி தலைமையில், ஐந்து மாநில தேர்தலிலும், பா.ஜ., தன் தடத்தை விரிவுபடுத்தி உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ., உள்ளது. காங்., தேசிய கட்சி அந்தஸ்தை இழந்து வருகிறது.இவ்வாறு சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
03-மே-202109:26:46 IST Report Abuse
vbs manian கழகம் என்றும் மாறாது.வெறுப்பு எதிர்ப்பு அரசியல் செய்தெ வளர்ந்தவர்கள்.இந்த விஞ்ஞான யுகத்திலும் இவர்கள் முன்னிலை பெறுவது ஆச்சர்யம். எல்லாவற்றிலும் நம்பிக்கை போய் விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X