அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு மோடி, சோனியா, ரஜினி வாழ்த்து

Added : மே 03, 2021
Share
Advertisement
சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்னர்.'டுவிட்டர்' பக்கத்தில், பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, தி.மு.க.,வுக்கும், அதன் தலைவர் ஸ்டாலினுக்கும் வாழ்த்துகள். கொரோனா நோய் தொற்றை ஒழித்து,

சென்னை:தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்னர்.

'டுவிட்டர்' பக்கத்தில், பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, தி.மு.க.,வுக்கும், அதன் தலைவர் ஸ்டாலினுக்கும் வாழ்த்துகள். கொரோனா நோய் தொற்றை ஒழித்து, பிராந்திய விருப்பங்களை நிறைவேற்ற, நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த, நாம் இணைந்து பணியாற்றுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்., தலைவர் சோனியா, நடிகர் ரஜினி, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, உ.பி., முன்னாள் முதல்வர் மாயாவதி ஆகியோரும் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.தமிழக அரசின் தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், டி.ஜி.பி., திரிபாதி, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நஜிமுதீன், கார்த்திகேயன், சந்திரமோகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக காவல் துறை நிர்வாகப் பிரிவு சிறப்பு டி.ஜி.பி., கந்தசாமி, தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு, ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி., சங்கர் ஜிவால், சிறப்பு காவல்படை கூடுதல் டி.ஜி.பி., ரவி. ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ஜாங்கிட், அப்பல்லோ மருத்துவமனை குழும துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி மற்றும் தொழில திபர்கள், திரையுலக பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, கருணாநிதி உறவினர் அமிர்தம் மற்றும் ஸ்டாலின் உறவினர்களும், வெற்றி பெற்ற வேட்பாளர்களும், ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், ச.ம.க., தலைவர் சரத்குமார் ஆகியோர், ஸ்டாலினுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X