தேர்தல் துளிகள்

Added : மே 03, 2021
Share
Advertisement
கொண்டாட்டம் இல்லை!கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதை அடுத்து, தொற்று தடுப்பு நடவடிக்கையாக, தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, 'அசாமில் தேர்தல் வெற்றியை, பா.ஜ., தொண்டர்கள் கொண்டாட வேண்டாம்' என அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.சிறுபான்மையினர் ஆதரவு!வட கிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சரும், அசாம் மாநில

கொண்டாட்டம் இல்லை!

கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதை அடுத்து, தொற்று தடுப்பு நடவடிக்கையாக, தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, 'அசாமில் தேர்தல் வெற்றியை, பா.ஜ., தொண்டர்கள் கொண்டாட வேண்டாம்' என அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.

சிறுபான்மையினர் ஆதரவு!

வட கிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சரும், அசாம் மாநில தேர்தல் துணை பொறுப்பாளருமான ஜிதேந்திரா சிங் கூறியதாவது:வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கு முன் உதாரணமாக, வட கிழக்கு மாநிலங்கள் திகழ்கின்றன. கொரோனா தடுப்பு பணிகளிலும், உதாரணமாக திகழ்கிறது.முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது. பாரபட்ச மின்றி, வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாக வைத்து செயல்படும் போது, அதை மக்கள் புரிந்து கொள்கின்றனர். சிறுபான்மையின மக்கள், பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க மாட்டார்கள் என்ற கருத்து, இந்த தேர்தலில் உடைத்தெறியப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த முதல்வர் யார்?

அசாம் சட்டசபைக்கு, 2016ல் நடந்த தேர்தலின் போது, பா.ஜ., மூத்த தலைவர் சர்பானந்த சோனவாலை, முதல்வர் வேட்பாளராக பா.ஜ., தலைமை முன்னிறுத்தியது. ஆனால், இந்த சட்டசபை தேர்தலில், முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து, டில்லி தலைமை அறிவிக்க வில்லை. இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா, முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

அசாமில் இரண்டு முதல்வர்கள் செயல்படுவதாக, தேர்தல் பிரசாரத்தின் போது, காங்கிரஸ் விமர்சனம் செய்தது.தற்போது ஐந்தாவது முறையாக, வெற்றி பெற்றுள்ள ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மாவிடம், இது குறித்து செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.அவர் கூறுகையில், ''இது குறித்து இப்போது கருத்துக் கூற விரும்பவில்லை. அடுத்த முதல்வர் குறித்து, மத்திய குழு முடிவு செய்யும்,'' என்றார்.

அசாமில் ஆளும் பா.ஜ., அமைச்சரவையில் சுகாதாரம், நிதி, கல்வி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய பெறுப்புகளை, ஹிமந்தா பிஸ்வாஸ் வகித்து வருகிறார்.

'நோட்டா'வுக்கு குறைந்த ஆதரவு!

'நோட்டா' எனப்படும், யாருக்கும் ஓட்டு இல்லை என்று, வாக்காளர்கள் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கும் வாய்ப்பு, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் மிக குறைவாகவே பயன்படுத்த பட்டு உள்ளதாக, தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.இது குறித்து, தேர்தல் ஆணைய இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:அசாமின் மொத்த வாக்காளர்களில், 1.22 சதவீதம், அதாவது, ஒரு லட்சத்து, 54 ஆயிரத்து, 399 பேரும், தமிழகத்தில், 0.78 சதவீதமான, ஒரு லட்சத்து, 84 ஆயிரத்து, 604 பேரும், நோட்டாவுக்கு ஓட்டளித்துள்ளனர். கேரளாவில், 0.5 சதவீதமும், புதுச்சேரியில், 1.30 சதவீதமும், மேற்கு வங்கத்தில், 1.1 சதவீதம் பேரும், நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காங்., தலைவர் ராஜினாமா!

அசாம் மாநில காங்., தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான ரிபுன் போரா, அசாமின் கோபூர் தொகுதியில் போட்டியிட்டு, பா.ஜ., வேட்பாளர் உத்பல் போராவிடம், 29 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.இதையடுத்து, மாநில தலைவர் பதவியை, அவர் ராஜினாமா செய்தார்.

இது தொடர்பாக, சோனியாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:அசாம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைத்தும், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,சின் மத அரசியலுக்கு எதிராக போராடி வெற்றி பெறமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்.எனவே, தோல்விக்கு பொறுப்பேற்று, என் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். கட்சியின் மதிப்பை உயர்த்த, உண்மையான காங்கிரஸ் தொண்டராக உழைக்க விரும்புகிறேன்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுஉள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X