இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்களால் விழுப்புரத்தில் ஓட்டு எண்ணிக்கை பணி மந்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்களால் விழுப்புரத்தில் ஓட்டு எண்ணிக்கை பணி மந்தம்

Added : மே 03, 2021
Share
விழுப்புரம்; இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்களால், விழுப்புரம் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை பணி மந்தமாக நடந்தது.தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, நேற்று நடந்தது. விழுப்புரம் தொகுதியில், 25 பேர் போட்டியிட்டனர். இதனால், தேர்தலில் இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. கடந்த 6ம் தேதி நடந்த தேர்தலில் 1,00,242 ஆண்கள், 1,01,481 பெண்கள் மற்றும் 3 திருநங்கைகள் என

விழுப்புரம்; இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்களால், விழுப்புரம் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை பணி மந்தமாக நடந்தது.தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, நேற்று நடந்தது. விழுப்புரம் தொகுதியில், 25 பேர் போட்டியிட்டனர். இதனால், தேர்தலில் இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. கடந்த 6ம் தேதி நடந்த தேர்தலில் 1,00,242 ஆண்கள், 1,01,481 பெண்கள் மற்றும் 3 திருநங்கைகள் என மொத்தம் 2,01,726 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். தேர்தலுக்கு பயன்படுத்திய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், விழப்புரம் அரசு கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. நேற்று காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி துவங்கியது. இதற்காக, 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, 27 சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை நடைபெற்ற கல்லுாரி வளாகத்தை சுற்றி மூன்றடுக்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஓட்டு எண்ணும் பணிக்க வந்த அலுவலர்கள் மற்றும் முகவர்கள், பத்திரிக்கையாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெப்பநிலை பரிசோதனை செய்து, முகக்கவசம் மற்றும் கையுறை வழங்கப்பட்டது. மேலும், ஓட்டு எண்ணும் மையத்தில் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் என்பதால், மற்ற தொகுதிகளில் 10 சுற்றுகள் முடிந்த நிலையில், விழுப்புரத்தில் 5 சுற்றுகள் மட்டுமே முடிந்தது.தபால் ஓட்டால் சர்ச்சைவிழுப்புரம் தொகுதியில் மொத்தம் 3,873 தபால் ஓட்டுகளில், 3,296 ஓட்டுகள் பதிவாகியது. இந்த ஓட்டுகள் தனி அறையில் 2 மேஜைகளில் எண்ணும் பணி காலை 8:00 மணிக்கு, முகவர்கள் முன்னிலையில் பிரித்து எண்ணப்பட்டது.அப்போது, ஒரு சில தபால் ஓட்டுகளில் 'டிக்' மார்க் குறியீடு சரியாக பதிவு செய்யாதது மற்றும் கையெழுத்து போடாதது உள்ளிட்ட சில பிழைகள் இருந்தது. இதில், 'டிக்' மார்க் குறியீடு சரியான கட்டத்திற்குள் இல்லாமல் வெளியில் இருப்பதாக, தி.மு.க.,-அ.தி.மு.க.,வினர் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X