மம்தாவுக்கு பிரதமர் வாழ்த்து

Added : மே 03, 2021
Share
Advertisement
புதுடில்லி:மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும், மம்தா பானர்ஜிக்கும், கேரளாவில் ஆட்சியை தக்க வைத்த, பினராயி விஜயனுக்கும், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில், மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர், தன் 'டுவிட்டர்' பக்கத்தில், 'திரிணமுல் காங்., பெற்றுள்ள வெற்றிக்கு,

புதுடில்லி:மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும், மம்தா பானர்ஜிக்கும், கேரளாவில் ஆட்சியை தக்க வைத்த, பினராயி விஜயனுக்கும், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில், மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர், தன் 'டுவிட்டர்' பக்கத்தில், 'திரிணமுல் காங்., பெற்றுள்ள வெற்றிக்கு, மம்தாவுக்கு வாழ்த்துகள்.கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ளவும், மாநில மக்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யவும், மேற்கு வங்க அரசுக்கு தேவையான உதவிகளை, மத்திய அரசு தொடர்ந்து அளிக்கும்' என, குறிப்பிட்டு உள்ளார்.

கேரளாவில், தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ள, முதல்வர் பினராயி விஜயனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.'டுவிட்டர்' பக்கத்தில், 'கேரள சட்டசபை தேர்தலில், இடது ஜனநாயக முன்னணி பெற்ற வெற்றிக்கு, பினராயி விஜயனுக்கு வாழ்த்துகள்.'இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், நாங்கள் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம்' என, குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X