பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க.,வுக்கு 4 'சீட்' அ.தி.மு.க., கூட்டணிக்கு மூன்று

Added : மே 03, 2021
Share
Advertisement
விழுப்புரம் மாவட்டத்தில், தி.மு.க., 4 தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.கடந்த, 2016 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விழுப்புரம், வானுார் ஆகிய இரு இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. செஞ்சி, திண்டிவனம், மயிலம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் ஆகிய 5 தொகுதிகளை, தி.மு.க., கைப்பற்றியது.பின்னர், நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க.,விடம் இருந்த
 விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க.,வுக்கு 4 'சீட்' அ.தி.மு.க., கூட்டணிக்கு மூன்று



விழுப்புரம் மாவட்டத்தில், தி.மு.க., 4 தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.கடந்த, 2016 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் விழுப்புரம், வானுார் ஆகிய இரு இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. செஞ்சி, திண்டிவனம், மயிலம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் ஆகிய 5 தொகுதிகளை, தி.மு.க., கைப்பற்றியது.பின்னர், நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க.,விடம் இருந்த விக்கிரவாண்டியை, ஆளுங்கட்சியான அ.தி.மு.க., கைப்பற்றியது.நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, திருக்கோவிலுார் ஆகிய 4 தொகுதிகளை தி.மு.க., கைப்பற்றியுள்ளது. அமைச்சர் சண்முகம், தொடர்ந்து இரு முறை வெற்றி பெற்ற விழுப்புரம் தொகுதியை அ.தி.மு.க.,விடம் இருந்து தி.மு.க., கைப்பற்றியுள்ளது.அதே நேரத்தில் தி.மு.க., சிட்டிங் எம்.எல்.ஏ.,க்களான மயிலம் தொகுதியில் டாக்டர் மாசிலாமணி, திண்டிவனம் தொகுதியில் சீத்தாபதி சொக்கலிங்கம் ஆகியோர் வெற்றியை இழந்துள்ளனர்.திண்டிவனம் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் அர்ச்சுணன், மயிலம் தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் சிவக்குமார் ஆகிய இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற முத்தமிழ்ச்செல்வன், மீண்டும் போட்டியிட்டார். கடந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி, தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X