பொது செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரம் தொகுதியில் 5 இயந்திரங்கள் பழுது

Added : மே 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; சங்கராபுரம் தொகுதியில் நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது, 5 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.சங்கராபுரம் சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணும் பணி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. காலை 8.30 மணியளவில் ஓட்டு எண்ணும் பணி துங்கியது. இதில் சேராப்பட்டு பூத் -3, வடசிறுவளூர் பூத் - 112,

கள்ளக்குறிச்சி; சங்கராபுரம் தொகுதியில் நடந்த ஓட்டு எண்ணிக்கையின் போது, 5 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.சங்கராபுரம் சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணும் பணி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது. காலை 8.30 மணியளவில் ஓட்டு எண்ணும் பணி துங்கியது. இதில் சேராப்பட்டு பூத் -3, வடசிறுவளூர் பூத் - 112, சங்கராபுரம் டவுன் பூத் -126, சேராப்பட்டு பூத் -152, கடத்துார் பூத் -254ஏ ஆகிய இயந்திரங்கள் திடீரென பழுதாகின. இந்த 5 பூத்களிலும் 3 ஆயிரத்து 897 ஓட்டுகள் பதிவாகியிருந்தன.தொடர்ந்து, மாலை 6.15 மணியளவில் 27 சுற்றுகள் முடிந்த பிறகு, பழுதாகிய 5 பூத் வி.வி.பாட் இயந்திர பதிவுகளை கொண்டு, தேர்தல் முடிவு வெளியிடப்பட்டது. இதனால் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X