பொது செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரத்தில் 5வது முறையாக தி.மு.க., வெற்றி

Added : மே 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; சங்கராபுரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் உதயசூரியன் 5 வது முறையாக வெற்றி பெற்றார். சங்கராபுரம் சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட உதயசூரியன், 1 லட்சத்து 21 ஆயிரத்து 186 ஓட்டுக்களை பெற்று, வெற்றி பெற்றார். பா.ம.க., சார்பில் போட்டியிட்ட ராஜா, 75 ஆயிரத்து 223 ஓட்டுகள் பெற்று வெற்றி வாய்ப்பினை

கள்ளக்குறிச்சி; சங்கராபுரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் உதயசூரியன் 5 வது முறையாக வெற்றி பெற்றார். சங்கராபுரம் சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட உதயசூரியன், 1 லட்சத்து 21 ஆயிரத்து 186 ஓட்டுக்களை பெற்று, வெற்றி பெற்றார். பா.ம.க., சார்பில் போட்டியிட்ட ராஜா, 75 ஆயிரத்து 223 ஓட்டுகள் பெற்று வெற்றி வாய்ப்பினை இழந்தார்.சங்கராபுரம் தொகுதியில் இதுவரை நடந்த 14 சட்டமன்ற தேர்தல்களில், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ., வாக உதயசூரியன் உள்ளார். கடந்த 1991ம் ஆண்டு தேர்தலின் போது, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ராமசாமி 45 ஆயிரத்து 78 ஓட்டுகள் பெற்றிருந்தார். இந்த தேர்தலில் உதயசூரியன் 45,963ஓட்டுகள் பெற்றுள்ளது குறிப்பிடித்தக்கது. இதுவரை 7 முறை போட்டியிட்ட உதயசூரியன் 2 முறை வெற்றிவாய்ப்பை இழந்தார். 4 முறை வெற்றிபெற்ற இவர் தற்போது 5வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X