பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தொழில் நுட்ப கோளாறு சரியானது

Added : மே 03, 2021
Share
Advertisement
திண்டிவனம்,; திண்டிவனம் சட்டசபை தொகுதியில் இரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, சரிசெயயப்பட்டது.திண்டிவனம் சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், 24வது சுற்றில் அ.தி.மு.க., வேட்பாளர் அர்ஜூணன் 10.059 ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளர் சீத்தாபதியை விட முன்னிலையில் இருந்தார். இதில், பூத் எண்கள் 30, 35களில்

திண்டிவனம்,; திண்டிவனம் சட்டசபை தொகுதியில் இரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, சரிசெயயப்பட்டது.திண்டிவனம் சட்டசபை தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், 24வது சுற்றில் அ.தி.மு.க., வேட்பாளர் அர்ஜூணன் 10.059 ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளர் சீத்தாபதியை விட முன்னிலையில் இருந்தார். இதில், பூத் எண்கள் 30, 35களில் பதிவாகிய இரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த இயந்திரங்கள் சரி செய்யப்பட்டது.இதில் ஒரு இயந்திரத்தில் அ.தி.மு.க., 386 ஓட்டுகளும், தி.மு.க., 143, தே.மு.தி.க., 17, நாம் தமிழர் 5, ம.நீ.ம., 6 ஓட்டுகளும் பதிவாகியது. மற்றொரு இயந்திரத்தில் அ.தி.மு.க., 271, தி.மு.க., 486, தே.மு.தி.க., 5, நாம் தமிழர் 29, ம.நீ.ம., 1 ஓட்டுகள் பதிவாகியிருந்தன. முடிவில், வேட்பாளர்கள் வாங்கிய மொத்த ஓட்டுகளோடு, அவரவரின் ஓட்டுகள் கணக்கில் பழுது நீக்கிய இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் சேர்க்கப்பட்டது. இந்த தொகுதியில் தபால் ஓட்டுகளை எண்ணி, அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.விழுப்புரம்: விழுப்புரம் சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை கீழ்பெரும்பாக்கம் அரசு கல்லுாரியில் நடந்தது. இதில், விழுப்புரம் நகராட்சி 94வது ஓட்டுச் சாவடியில் பயன்படுத்திய ஓட்டுப்பதிவு இயந்திரத்தை அதிகாரிகள் சீல் பிரித்தனர். அப்போது, இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளின் சரியான எண்ணிக்கை காட்டவில்லை. இதேபோன்று, கோலியனுார் ஒன்றியம் ஓட்டேரிப்பாளையம் ஓட்டுச்சாவடி மையம் 210 ஏ.,வில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுது என காண்பித்தது. இதையடுத்து, இந்த இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு மற்ற இயந்திரங்களில் ஓட்டு எண்ணிக்கையை எண்ணினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X