பொது செய்தி

தமிழ்நாடு

வானூர் (தனி) தொகுதியில் அதிமுக 5வது முறையாக வெற்றி

Added : மே 03, 2021
Share
Advertisement
வானுார்; வானுார் தொகுதியில் அ.தி.மு.க., தொடர்ந்து, ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று, தொகுதியை தக்க வைத்துள்ளது.விழுப்புரம் மாவட்டம், வானுார் தொகுதி, கடந்த 1962ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை நடந்த ஐந்து சட்டசபை தேர்தல்களில் தி.மு.க., கோட்டையாக விளங்கியது.அதன்பிறகு நடந்த தேர்தல்களில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., மாறி மாறி வெற்றி பெற்று வந்தன.கடந்த 2001ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக

வானுார்; வானுார் தொகுதியில் அ.தி.மு.க., தொடர்ந்து, ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று, தொகுதியை தக்க வைத்துள்ளது.விழுப்புரம் மாவட்டம், வானுார் தொகுதி, கடந்த 1962ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை நடந்த ஐந்து சட்டசபை தேர்தல்களில் தி.மு.க., கோட்டையாக விளங்கியது.அதன்பிறகு நடந்த தேர்தல்களில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., மாறி மாறி வெற்றி பெற்று வந்தன.கடந்த 2001ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக அ.தி.மு.க., வானுார் தொகுதியை தக்க வைத்து வருகிறது. கடந்த, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட கணபதியும், 2011 தேர்தலில் ஜானகிராமனும் வெற்றி பெற்றனர்.கடந்த 2016 தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சக்கரபாணி வெற்றி பெற்றார். தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற அ.தி.மு.க., சார்பில், மீண்டும் சக்கரபாணி மீண்டும் களமிறக்கப்பட்டார். இத்தேர்தலில், சக்கரபாணி தன்னை எதிர்த்து போட்டியிட்ட வி.சி., வேட்பாளர் வன்னியரசுவை விட 21,727 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொகுதியை 5ம் முறையாக அ.தி.மு.க., வசமாக்கி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X