பொது செய்தி

தமிழ்நாடு

கடைசி சுற்று வரை பரபரப்பை ஏற்படுத்திய தொகுதிகள்

Added : மே 03, 2021
Share
Advertisement
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் நெய்வேலி மற்றும் விருத்தாசலம் தொகுதிகள் கடைசி நிமிடம் வரை யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பை ஏற்படுத்தியது. கடலுார் மாவட்டத்தில், நெய்வேலி தொகுதியில் தி.மு.க., சபா ராஜேந்திரனும், விருத்தாசலம் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்., ராதாகிருஷ்ணனும் போட்டியிட்டனர். இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., சார்பில்

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் நெய்வேலி மற்றும் விருத்தாசலம் தொகுதிகள் கடைசி நிமிடம் வரை யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பை ஏற்படுத்தியது. கடலுார் மாவட்டத்தில், நெய்வேலி தொகுதியில் தி.மு.க., சபா ராஜேந்திரனும், விருத்தாசலம் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் காங்., ராதாகிருஷ்ணனும் போட்டியிட்டனர். இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., சார்பில் விருத்தாசலத்தில் கார்த்திகேயனும், நெய்வேலியில் ஜெகனும் போட்டியிட்டனர்.நெய்வேலி தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து பா.ம.க., ஜெகன் முன்னிலையில் இருந்தார். 11வது சுற்றில் 10,319 ஓட்டுகள் முன்னிலையில் இருந்த ஜெகன், தொடர்ந்து 17 சுற்றுகள் வரை முன்னிலையில் இருந்தார். அதன் பிறகு 18வது சுற்றில் இருந்து தி.மு.க., சபா ராஜேந்திரன் படிப்படியாக முன்னிலை பெறத் துவங்கினார்.18வது சுற்றில் 1,252 ஓட்டுகள், 19வது சுற்றில் 1,845, தொடர்ந்து 20 வது சுற்றில் 2,224 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். 22வது சுற்றில் தி.மு.க., சபா ராஜேந்திரன் 75,177 ஓட்டுகள் பெற்று, 977 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ம.க., ஜெகன் 74,200 ஓட்டுகள் பெற்று தோல்வியைத் தழுவினார். அதே போன்று விருத்தாசலம் தொகுதியில் துவக்கத்தில் இருந்து 17வது சுற்று வரை காங்., ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால், 18வது சுற்று முதல் பா.ம.க., கார்த்திகேயன் 1,762 ஓட்டுகளும், 19வது சுற்றில் 20வது சுற்றில் 2,100 ஓட்டுகளும், 21வது சுற்றில் 271 ஓட்டுகளும் பெற்று முன்னிலை வகித்தார்.பின், 22 வது சுற்றில் காங்., ராதாகிருஷ்ணன் 329 ஓட்டுகளும், 23வது சுற்றில் 455 ஓட்டுகளும் பெற்று முன்னிலையில் இருந்தார்.24வது சுற்றில் பா.ம.க., கார்த்திகேயன் 27 ஓட்டுகளிலும், 25வது சுற்றில் 133 ஓட்டுகளும் பெற்று முன்னிலையில் இருந்தார். கடைசி 26வது சுற்றில் காங்., ராதாகிருஷ்ணன் 356 ஓட்டுகளில் முன்னிலை வகித்து 77,064 ஓட்டுகளுடன் 862 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பா.ம.க., வேட்பாளர் கார்த்திகேயன் 76,202 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.விருத்தாசலம், நெய்வேலி தொகுதிகளில் கடைசி வரை இழுபறியாக இருந்ததால் வேட்பாளர்கள் மட்டுமின்றி முகவர்கள், கட்சித் தொண்டர்களும் திக்... திக்... மன நிலையில் இருந்தனர். கடைசியில் நெய்வேலியில் தி.மு.க., சபா ராஜேந்திரனும், விருத்தாசலத்தில் காங்., ராதாகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர்.இதே போன்று, பண்ருட்டியில் அ.தி.மு.க.,வில் சொரத்துார் ராஜேந்திரனும், தி.மு.க.,வில் கூட்டணி கட்சியான த.வா.க., வேல்முருகனும்; கடைசி நிமிடம் வரை மாறி மாறி முன்னிலை வகித்து கடைசியில் பண்ருட்டியில் வேல்முருகன் வெற்றி பெற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X