பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் நுட்பக்கோளாறு ஓட்டு எண்ணும் பணி மந்தம்

Added : மே 03, 2021
Share
Advertisement
புவனகிரி; புவனகிரி தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கையின்போது, இயந்திரத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 2 மணி நேரம் தாமதம் ஆனது.புவனகிரி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை சி.முட்லுார் அரசு கல்லுாரியில் நேற்று நடந்தது.சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கான 10 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் புவனகிரி தொகுதிக்கான 5வது

புவனகிரி; புவனகிரி தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கையின்போது, இயந்திரத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் 2 மணி நேரம் தாமதம் ஆனது.புவனகிரி, சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை சி.முட்லுார் அரசு கல்லுாரியில் நேற்று நடந்தது.சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தொகுதிக்கான 10 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் புவனகிரி தொகுதிக்கான 5வது சுற்று எண்ணிகை துவங்கியபோது, மிஷனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயங்கவில்லை.இதனால், மதியம் 12:00 மணி வரை 5வது சுற்று அறிவிக்க முடியவில்லை. சிறிது நேரத்திற்கு பின் இயந்திரம் சரி செய்யப்பட்டு 12:45 மணிக்குப் பிறகு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.இது குறித்த தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் அன்பழகன் கூறுகையில், 'தேர்தல் நடந்த பின், ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் பட்டனை முறையாக அழுத்தி சரி செய்யாமல் விட்டிருந்தனர்.இதனால் எண்ணிகையின் போது இயந்திரம் முறையாக இயங்க வில்லை.இதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் தடைபட்டது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X