பொது செய்தி

தமிழ்நாடு

'ஜெட்' வேகத்தில் திட்டக்குடி 'டெட் ஸ்லோ' விருத்தாசலம்

Added : மே 03, 2021
Share
Advertisement
விருத்தாசலம்; ஓட்டு எண்ணிக்கையின்போது திட்டக்குடி தொகுதியில் ஜெட் வேகத்திலும், விருத்தாசலத்தில் ஆமை வேகத்திலும் நடந்தது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், விருத்தாசலம், திட்டக்குடி சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் பணி நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விருத்தாசலம் பிரவீன்குமார், திட்டக்குடி விக்னேஸ்வரன் தலைமையில் காலை 7:00 மணிக்குள் அனைத்து

விருத்தாசலம்; ஓட்டு எண்ணிக்கையின்போது திட்டக்குடி தொகுதியில் ஜெட் வேகத்திலும், விருத்தாசலத்தில் ஆமை வேகத்திலும் நடந்தது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில், விருத்தாசலம், திட்டக்குடி சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் பணி நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விருத்தாசலம் பிரவீன்குமார், திட்டக்குடி விக்னேஸ்வரன் தலைமையில் காலை 7:00 மணிக்குள் அனைத்து அலுவலர்களும், பணிகளைத் துவக்கினர்.திட்டக்குடி தொகுதியில் தபால் ஓட்டு எண்ணும் பணி 8:00 மணிக்கு துவங்கிய நிலையில், விருத்தாசலம் தொகுதியில் 8:45 மணிக்கு மேல், துவங்கியது.இதேபோன்று, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஓட்டுகளை எண்ணும் பணியும் தாமதமாகவே துவங்கியது.மாலை 4:00 மணியளவில், திட்டக்குடிக்கு 20 சுற்றுகள் சென்ற நிலையில், விருத்தாசலத்தில் 13 சுற்றுகள் மட்டுமே நிறைவடைந்தது.இதனால் வேட்பாளர்களின் ஓட்டுகள் வித்தியாசம் குறித்த தகவல்களை உடனுக்குடன் பெற முடியாமல் பத்திரிகையாளர்கள் அவதியடைந்தனர்.பத்திரிக்கையாளர்களுக்கு 'டிவி' வசதியுடன் ஒதுக்கப்பட்ட அறையில், வேட்பாளர்களின் முகவர்கள், முன்னணி கண்காணிப்பாளர்கள் ஆக்கிரமித்ததால் பத்திரிகையாளர்கள் இடமின்றி செய்தி சேகரிக்கவும், சாப்பிடவும் மர நிழலில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X