5 தொகுதிகளை அள்ளியது தி.மு.க.,| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

5 தொகுதிகளை அள்ளியது தி.மு.க.,

Added : மே 03, 2021
Share
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தி.மு.க., வும், கூட்டணி கட்சியான வி.சி., மற்றும் காங்., கட்சிகளும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன.கடலுார் மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, நெய்வேலி, திட்டக்குடி தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகளான வி.சி., காட்டுமன்னார்கோவில் தொகுதியிலும், விருத்தாசலம்

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 9 தொகுதிகளில் 5 தொகுதிகளில் தி.மு.க., வும், கூட்டணி கட்சியான வி.சி., மற்றும் காங்., கட்சிகளும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன.கடலுார் மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, நெய்வேலி, திட்டக்குடி தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட்டது. அதன் கூட்டணி கட்சிகளான வி.சி., காட்டுமன்னார்கோவில் தொகுதியிலும், விருத்தாசலம் தொகுதியில் காங்., கட்சியும் போட்டியிட்டது.இதில், தி.மு.க., சார்பில் கடலுார் தொகுதியில் அய்யப்பன், பண்ருட்டி வேல்முருகன் (உதயசூரியன் சின்னத்ததில் போட்டி) குறிஞ்சிப்பாடி பன்னீர்செல்வம், நெய்வேலி சபா ராஜேந்திரன், திட்டக்குடி கணேசன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வி.சி., வேட்பாளர் சிந்தனைச்செல்வன், விருத்தாசலம் தொகுதியில் காங்., வேட்பாளர் ராதாகிருஷ்ணனும் வெற்றி பெற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X