பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு ரயில் நேரத்தை மாற்றி அமைக்க கோரிக்கை

Added : மே 03, 2021
Share
Advertisement
மந்தாரக்குப்பம்; ஊத்தங்கால் தனியார் அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயிலின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என என்.எல்.சி., தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மந்தாரக்குப்பத்திலிருந்து நெய்வேலி டவுன்ஷிப்பிற்குச் செல்லும் சாலை வடக்கு வெள்ளூரில் ரயில்வே கேட் உள்ளது. வடலுார் - ஊத்தங்கால் வழியாக தினசரி தனியார் அனல் மின் நிலையத்திற்கு

மந்தாரக்குப்பம்; ஊத்தங்கால் தனியார் அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயிலின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என என்.எல்.சி., தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மந்தாரக்குப்பத்திலிருந்து நெய்வேலி டவுன்ஷிப்பிற்குச் செல்லும் சாலை வடக்கு வெள்ளூரில் ரயில்வே கேட் உள்ளது. வடலுார் - ஊத்தங்கால் வழியாக தினசரி தனியார் அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்கள் இவ்வழியாக இயக்கப்படுகின்றன.வடக்கு வெள்ளூரில் உள்ள ரயில்வே கேட் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், அதிகாரிகள், இலகு மற்றும் கனரக வாகனங்கள் செல்கின்றன. ஷிப்ட் நேரத்தில் ரயில்வே கேட் மூடப்படுவதால் தொழிலாளர்கள் கடும் சிரமம் அடைகின்றனர்.இது குறித்து என்.எல்.சி., ஊழியர்கள் கூறுகையில், 'காலை மற்றும் மாலை வேளைகளில் ஷிப்ட் நேரத்தில் சரக்கு ரயில் செல்லும் போது ரயில்வே கேட் மூடப்படுவதால் என்.எல்.சி., இரண்டாம் சுரங்கத்திற்குச் செல்லும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.எனவே, ஷிப்ட் நேரத்தைத் தவிர்த்து மாற்று நேரத்தில் சரக்கு ரயிலை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X