பொது செய்தி

தமிழ்நாடு

காலை உணவு வழங்காததால் ஓட்டு எண்ணும் பணி தாமதம்

Added : மே 03, 2021
Share
Advertisement
பண்ருட்டி; பண்ருட்டியில், தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு காலை உணவு வழங்காததால் ஓட்டு எண்ணும் பணி தாமதமானது.பண்ருட்டி தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை பனிக்கன்குப்பம் அண்ணா பொறியியல் கல்லுாரியில் நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணியில் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.அதிகாலை 5:00 மணியளவில் பணிக்கு வந்த

பண்ருட்டி; பண்ருட்டியில், தபால் ஓட்டுக்கள் எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு காலை உணவு வழங்காததால் ஓட்டு எண்ணும் பணி தாமதமானது.பண்ருட்டி தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை பனிக்கன்குப்பம் அண்ணா பொறியியல் கல்லுாரியில் நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணியில் 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.அதிகாலை 5:00 மணியளவில் பணிக்கு வந்த அவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்காததால் காலை 9:30 மணிக்கு தபால் ஓட்டு எண்ணும் பணியை நிறுத்தினர். 10:30 மணி வரை வழங்காத நிலையில் முகவர்கள் நேரம் ஆகிறது ஓட்டு எண்ணும் பணியை துவங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மீண்டும் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி நடந்தது. பின், காலை உணவு இன்றி மதியம் 12:30 மணிக்கு அரசு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X