பொது செய்தி

தமிழ்நாடு

1000 படுக்கை வசதிகளுடன் 5 கல்லுாரிகளில் கொரோனா தனிமைப்படுத்தும் மையம் ஏற்பாடு

Added : மே 03, 2021
Share
Advertisement
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், 5 கல்லுாரிகளில் 1000 படுக்கை வசதியுடன், தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.இதனால், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 1000 படுக்கை வசதிகளுடன் 5 கல்லுாரிகளில் கொரோனா தனிமைப்படுத்தும் மையம் ஏற்பாடு

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், 5 கல்லுாரிகளில் 1000 படுக்கை வசதியுடன், தனிமைப்படுத்தும் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.இதனால், மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 13 கல்லுாரிகள் தனிமைப்படுத்தும் மையங்களாக அமைக்கப்பட்டுள்ளன.இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 10,500 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,706 பேர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.இந்நிலையில் தேர்தல் காரணமாக மாவட்டத்தில் கடந்த ஆண்டு தனிமைப்படுத்தும் மையங்களாக செயல்பட்ட கடலுார் தேவனாம்பட்டினம், விருத்தாசலம், சி.முட்லுார் அரசு கல்லுாரிகள், பண்ருட்டி அண்ணா பொறியியல் கல்லுாரி ஆகியவை ஓட்டு எண்ணும் மையங்களாக மாற்றப்பட்டு, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.நேற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்த நிலையில் இந்த 4 கல்லுாரிகள் மற்றும் திட்டக்குடி திருவள்ளுவர் அரசு கல்லுாரி என 5 கல்லுாரிகளில் 1000 படுக்கை வசதிகளுடன் ஓரிரு தினங்களில் கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக தயார் செய்ய ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X