மாவட்டத்தில் அ.தி.மு.க.,வுக்கு 2 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் அ.தி.மு.க.,வுக்கு 2 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது

Added : மே 03, 2021
Share
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 2 தொகுதிகளை மட்டுமே அ.தி.மு.க., கைப்பற்றியது.கடலுார் மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளான பா.ம.க., விருத்தாசலம் மற்றும் நெய்வேலி தொகுதியிலும், திட்டக்குடி தொகுதியில் பா.ஜ.,வும் போட்டியிட்டன.இதில், சிதம்பரம் மற்றும்

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 2 தொகுதிகளை மட்டுமே அ.தி.மு.க., கைப்பற்றியது.கடலுார் மாவட்டத்தில் கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட்டது. கூட்டணி கட்சிகளான பா.ம.க., விருத்தாசலம் மற்றும் நெய்வேலி தொகுதியிலும், திட்டக்குடி தொகுதியில் பா.ஜ.,வும் போட்டியிட்டன.இதில், சிதம்பரம் மற்றும் புவனகிரி தொகுதிகளை மட்டுமே அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது.கடலுார், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, திட்டக்குடி ஆகிய தொகுதிகளில் தி.மு.க., வும், அதன் கூட்டணி கட்சிகளான வி.சி., கட்சி காட்டுமன்னார்கோவிலும், விருத்தாசலம் தொகுதியில் காங்., கட்சியும், பண்ருட்டியில் த.வா.க.,வும் வெற்றி பெற்றுள்ளன. இதில், சிதம்பரம் தொகுதியை அ.தி.மு.க., மீண்டும் தக்க வைத்துக்கொண்டது. கடந்த தேர்தலில் தி.மு.க., வசம் இருந்த புவனகிரியை இம்முறை அ.தி.மு.க., கைப்பற்றியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X