அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுரையில் பாதிக்கு பாதி அ.தி.மு.க.,வுக்கு!

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் அ.தி.மு.க.,வும், 5 தொகுதிகளில் தி.மு.க.,வும் கைப்பற்றியுள்ளன.பெரும்பாலான மாவட்டங்களில் அ.தி.மு.க., தொகுதிகளை தி.மு.க., கைப்பற்றினாலும் மதுரையில் பாதிக்கு பாதி மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கூட்டணிக்கு தாரை வார்த்தது மற்றும் வேட்பாளர் தேர்வு செய்ததில் தி.மு.க., கோட்டை விட்டதால் மீதமுள்ள 5 தொகுதிகள் கைவிட்டு போனதாக
Madurai, ADMK, DMK

மதுரை : மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் அ.தி.மு.க.,வும், 5 தொகுதிகளில் தி.மு.க.,வும் கைப்பற்றியுள்ளன.

பெரும்பாலான மாவட்டங்களில் அ.தி.மு.க., தொகுதிகளை தி.மு.க., கைப்பற்றினாலும் மதுரையில் பாதிக்கு பாதி மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கூட்டணிக்கு தாரை வார்த்தது மற்றும் வேட்பாளர் தேர்வு செய்ததில் தி.மு.க., கோட்டை விட்டதால் மீதமுள்ள 5 தொகுதிகள் கைவிட்டு போனதாக அக்கட்சியினர் ஆதங்கப்படுகின்றனர்.

குறிப்பாக மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லுார் ராஜூவை எதிர்த்து தி.மு.க.,வில் பலவீனமான வேட்பாளராக சின்னம்மாள் நிறுத்தப்பட்டார். திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் உதயகுமாரை எதிர்த்து இன்னும் பலம் வாய்ந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டிருந்தால் அங்கு தி.மு.க.,விற்கு வெற்றி கிட்டியிருக்கும்.

மதுரை மத்தியில் தி.மு.க., 'சிட்டிங்' எம்.எல்.ஏ., தியாகராஜன் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்த நிலையில் அங்கு அ.தி.மு.க., நேரடியாக களம் இறக்காமல் கூட்டணிக்கு ஒதுக்கியதால் அத்தொகுதியை தி.மு.க., எளிதாக கைப்பற்றியது.

மேலுார் தொகுதி காங்., வேட்பாளராக ரவிச்சந்திரனை அறிவிக்க கூடாது என அக்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அவர் அறிவிக்கப்பட்டார். இதனால் உருவான உட்கட்சி பூசலால் இத்தொகுதியை இழக்க நேரிட்டது. இங்கு வெற்றி பெற்ற அ.தி.மு.க., வேட்பாளர் பெரியபுள்ளான் மீது அதிருப்தி இருந்த போதும் அவர் இரண்டாவது முறையாக இத்தொகுதியை தக்க வைத்தார்.

அ.தி.மு.க., - தி.மு.க., நேரடியாக களம் கண்ட மதுரை கிழக்கில் தி.மு.க., வேட்பாளர் மூர்த்தி அதிகபட்ச ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத் தொகுதியை அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., கேட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மாஜி எம்.பி., கோபாலகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்டது.

சோழவந்தானில் 'சிட்டிங்' அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மாணிக்கம் மீது தொகுதியில் அதிருப்தி இருந்தது. ஆனாலும் மீண்டும் அவருக்கே வாய்ப்பு கிடைத்தது. இதனால் அறிமுகம் இல்லாத வெங்கடேசனை வேட்பாளராக நிறுத்தி தி.மு.க., எளிதில் வென்றுள்ளது.

மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க., கூட்டணியான பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் வேட்பாளர் தேர்வில் குழப்பம் ஏற்பட்டது. தி.மு.க.,வில் இருந்து விலகி சில மணிநேரத்தில் பா.ஜ.,வில் இணைந்த டாக்டர் சரவணனுக்கு இங்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டதால் அ.தி.மு.க., பா.ஜ.,வுக்குள் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தி.மு.க., வேட்பாளர் தளபதி எளிதில் வென்றார்.


latest tamil news



உசிலம்பட்டி தொகுதியை கூட்டணியான பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒதுக்கினாலும் அக்கட்சியின் சிங்கம் சின்னம் இன்றி தி.மு.க.,வின் உதயசூரியனில் பா.பி., வேட்பாளர் கதிரவன் போட்டியிட்டார். இது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி தோல்விக்கு வித்திட்டது.

திருப்பரங்குன்றம், தி.மு.க.,கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அறிமுகம் இல்லாத மார்க்சிஸ்ட் வேட்பாளரை தொகுதியில் பிரபலமான அ.தி.மு.க.,வின் ராஜன் செல்லப்பா எளிதாக வென்றார். மதுரை லோக்சபா தொகுதி மார்க்சிஸ்ட் வசம் இருந்தும் இங்கு ஒதுக்கப்பட்ட ஒரே தொகுதியில் ஜெயிக்க முடியாமல் அக்கட்சி கோட்டை விட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-மே-202120:15:20 IST Report Abuse
ஆப்பு டாஸ்மாக் போல சமமா பிரிச்சுக்கிட்டு சந்தோஷமா வாழுங்க. மதுரைக்காரங்க பாசக்காரங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X