அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீட்க வந்த அ.ம.மு.க., மீள முடியாமல் தடுமாற்றம்

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில், 'மேஜிக்' காட்டும் வகையில், தனி அணியை உருவாக்கிய தினகரனின் அ.ம.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தவிப்புக்கு ஆளானது. அ.தி.மு.க.,வை மீட்கப் போவதாக கூறிய கட்சி, மீள முடியாத தோல்வியை சந்தித்துள்ளது.தி.மு.க., - அ.தி.மு.க., இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. அ.தி.மு.க.,வின் உள்கட்சி பிரச்னையால், புதிதாக உருவான தினகரனின் அ.ம.மு.க., இந்த தேர்தலில், தனி
TN election Results, AMMK, DMDK, Election Results 2021

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில், 'மேஜிக்' காட்டும் வகையில், தனி அணியை உருவாக்கிய தினகரனின் அ.ம.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தவிப்புக்கு ஆளானது. அ.தி.மு.க.,வை மீட்கப் போவதாக கூறிய கட்சி, மீள முடியாத தோல்வியை சந்தித்துள்ளது.

தி.மு.க., - அ.தி.மு.க., இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. அ.தி.மு.க.,வின் உள்கட்சி பிரச்னையால், புதிதாக உருவான தினகரனின் அ.ம.மு.க., இந்த தேர்தலில், தனி அணியாக களம் கண்டது.கூட்டணிஎஸ்.டி.பி.ஐ., கட்சி, ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மற்றும் சில ஜாதி கட்சிகளுடன் சேர்ந்து, தினகரன்கட்சி தேர்தலில்போட்டியிட்டது.

வெற்றி பெற்று, அ.தி.மு.க.,வை மீட்கப் போவதாக சூளுரைத்து, தினகரன் தேர்தலில் போட்டியிட்டார். 'மணலை கயிறாக்குவோம்' என, மாயாஜாலங்களை சொல்லத் தோன்றும் வகையில், தனியாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, மிகப்பெரும் கட்சி போல அ.ம.மு.க.,வை காட்டிக் கொண்டார். அ.தி.மு.க., கூட்டணியில் இடம் கிடைக்காமல் போன, தே.மு.தி.க.,வும், இந்த அணியுடன் சேர்ந்து, 60 இடங்களில் போட்டியிட்டது.

இந்நிலையில், நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான போது, ஒரு இடத்தில் கூட வெற்றியை நெருங்க முடியாமல், அ.ம.மு.க., அணி திணறியது. அதிலும், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், தான் போட்டியிட்ட கோவில்பட்டி தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் கடம்பூர் ராஜுவிடம் தோற்றார்.


தத்தளிப்பு


கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., - எஸ்.டி.பி.ஐ., மஜ்லிஸ் கட்சி போன்றவையும், இரண்டாம் இடத்தை கூட நெருங்க முடியாமல் தத்தளித்துள்ளன. பெரும்பாலான இடங்களில், 'டிபாசிட்' இழந்து, அ.ம.மு.க., அணி தடுமாறியது. அ.தி.மு.க., ஒரு பக்கம் தோற்றாலும், அ.ம.மு.க.,வின் தடுமாற்றம் அக்கட்சியினரை மகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.

ஒரே கட்சியாகஒற்றுமையாகச் செயல்பட்டிருந்தால், இந்தநிலை ஏற்பட்டிருக்காது என, இரு கட்சியினரும் பரஸ்பரம் கவலை தெரிவித்து வருகின்றனர்.


தே.மு.தி.க., படுதோல்வி!


அ.ம.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தே.மு.தி.க., அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது.


latest tamil news


அ.தி.மு.க.,வுடன் கூட்டணியை தொடர, தே.மு.தி.க., முயற்சித்தது. 13 தொகுதிகள் வரை கொடுக்க, அ.தி.மு.க., முன்வந்தது. ஏற்க மறுத்து, அ.ம.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து, 60 தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட்டது. தேர்தல் செலவிற்கு பணம் இல்லாமல், தே.மு.தி.க.,வினர் திண்டாடினர். கட்சி தலைமை கண்டுகொள்ளவே இல்லை. உடல்நலம் சரியில்லாததால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தால், பிரசாரத்தில் பேச முடியாத நிலை ஏற்பட்டது.

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டதால், விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும், மற்ற வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்யவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், பிரசாரம் செய்வதை தவிர்த்து விட்டார். விஜயகாந்த் மூத்த மகன் விஜயபிரபாகரன் மட்டும், பிரசாரம் செய்தார். போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும், இக்கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.

'தே.மு.தி.க., இடம் பெற்ற கூட்டணி தான், தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்' என, பிரேமலதா கூறி வந்தார். ஆனால், விருத்தாசலம் தொகுதியில், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார். மற்ற தொகுதிகளில், மூன்றாவது இடத்தை கூட, தே.மு.தி.க.,வினரால் பெற முடியவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
04-மே-202119:48:57 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ , இனி சின்ன சின்ன துக்கடா லட்டர்பேட் கட்சி எல்லாம் வேஸ்ட் லக்கேஜ் என இந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டுவிட்டதால் பெரியகட்சிகள் இனி அவர்கள் மிரட்டல்களுக்கு பயந்து சீட்டுகள் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை, அவர்களும் தன் ஆளுகள் பத்து பேரை வைத்து கொடிபிடித்து ஏதோ தங்களுக்கு தங்கள் சாதி ஓட்டு அத்தனையும் உள்ளதுபோல் இனி பம்மாத்து காட்ட இயலாது, வைகோ குருமா எல்லாம் வேஸ்ட் லக்கேஜ்தான், உதயசூரியன் சின்னம் இல்லாமல் போட்டிபோட்டால் இவர்களும் தோற்றிருப்பார்கள், என்ன இப்போது முதல்வர் ஆகிவிட்டதால் நேரடியாக திட்ட இயலாத 3சதவிகித சமூகம், பெரும்பான்மை மதத்தை கிழித்து தொங்கவிட்டு நிரூபிக்கவேண்டிய மதசார்பின்மை போன்றவற்றை எல்லாம் இவர்களின் உதடுகள் வழியே செய்ய உதவுவார்கள், அம்புட்டுதான்.
Rate this:
Cancel
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
04-மே-202116:52:41 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ நன்மைதான், இனி சின்ன சின்ன துக்கடா லட்டர்பேட் கட்சி எல்லாம் வேஸ்ட் லக்கேஜ் என இந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டுவிட்டதால் பெரியகட்சிகள் இனி அவர்கள் மிரட்டல்களுக்கு பயந்து சீட்டுகள் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை, அவர்களும் தன் ஆளுகள் பத்து பேரை வைத்து கொடிபிடித்து ஏதோ தங்களுக்கு தங்கள் சாதி ஓட்டு அத்தனையும் உள்ளதுபோல் இனி பம்மாத்து காட்ட இயலாது, சுடாலினிக்கு கூட வைகோ குருமா எல்லாம் வேஸ்ட் லக்கேஜ்தான், உதயசூரியன் சின்னம் இல்லாமல் போட்டிபோட்டால் இவர்களும் தோற்றிருப்பார்கள், என்ன சுடாலின் இப்போது முதல்வர் ஆகிவிட்டதால் நேரடியாக திட்ட இயலாத 3சதவிகித சமூகம், பெரும்பான்மை மதத்தை கிழித்து தொங்கவிட்டு நிரூபிக்கவேண்டிய மதசார்பின்மை போன்றவற்றை எல்லாம் இவர்களின் உதடுகள் வழியே செய்ய உதவுவார்கள், அம்புட்டுதான்.
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
03-மே-202116:42:19 IST Report Abuse
S.Ganesan சீட்டாட்டத்தில் ஜோக்கர் சீட்டு மற்ற சீட்டுகளுடன் சேர்ந்துதான் செட் சேரும். வெறும் ஜோக்கர்கள் மட்டுமே செட் ஆகாது. அது போலத்தான் அமமுக , தேமுதிக எஸ்.டி.பி.ஐ கட்சி,அகில இந்திய மஜ்லிஸ் கட்சிகளும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X