சென்னை: சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் களம் இறங்கிய, முதல்வர் உள்ளிட்ட, 27 அமைச்சர்களில், 16 பேர் வெற்றி பெற்றனர்.
அ.தி.மு.க., சார்பில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், 25 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. அமைச்சர்கள் வளர்மதி, நிலோபர் கபில், பாஸ்கரன் ஆகியோருக்கு, வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிட்டவர்களில், முதல்வர், துணை முதல்வர் உட்பட, 16 பேர் வெற்றி பெற்றனர். மற்றவர்கள் தோல்வியைத் தழுவினர். அவர்கள் விபரம்:
வெற்றி பெற்ற அமைச்சர்கள்
1. பழனிசாமி - எடப்பாடி
2. பன்னீர்செல்வம் - போடி நாயக்கனுார்
3. சீனிவாசன் - திண்டுக்கல்
4. செங்கோட்டையன் - கோபிசெட்டிபாளையம்
5. செல்லுார் ராஜு - மதுரை மேற்கு
6. தங்கமணி - குமாரபாளையம்
7. வேலுமணி - தொண்டாமுத்துார்
8. அன்பழகன் - பாலக்கோடு
9. கருப்பணன் - பவானி
10. காமராஜ் - நன்னிலம்
11. ஓ.எஸ்.மணியன் - வேதாரண்யம்
12. உடுமலை ராதாகிருஷ்ணன் - உடுமலைப்பேட்டை
13. விஜயபாஸ்கர் - விராலிமலை
14. கடம்பூர் ராஜு - கோவில்பட்டி
15. உதயகுமார் - திருமங்கலம்
16. ராமச்சந்திரன் - ஆரணி

தோற்ற அமைச்சர்கள்:
1. சி.வி.சண்முகம் - விழுப்புரம்
2. கே.சி.வீரமணி - ஜோலார்பேட்டை
3. ஜெயகுமார் - ராயபுரம்
4. எம்.சி.சம்பத் - கடலுார்
5. நடராஜன் திருச்சி - கிழக்கு
6. ராஜேந்திர பாலாஜி - ராஜபாளையம்
7. பெஞ்சமின் - மதுரவாயல்
8. பாண்டியராஜன் - ஆவடி
9. ராஜலட்சுமி - சங்கரன்கோவில்
10. சரோஜா - ராசிபுரம்
11. எம்.ஆர்.விஜயபாஸ்கர் - கரூர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE