அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்கிரஸ் நெருக்கடி இன்றி ஆட்சி அமைக்கிறது திமுக

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
சென்னை : இந்த முறை, காங்கிரசின் கூட்டணி ஆட்சி கோஷத்துக்கு ஆளாகாமல், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது, தி.மு.க., தலைமை.ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு பின், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியுடன், 2021 சட்டசபை தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. இதில், பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., கூட்டணியும், ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க., கூட்டணியும் நேரடியாக களத்தில்
DMK, MK Stalin, Congress

சென்னை : இந்த முறை, காங்கிரசின் கூட்டணி ஆட்சி கோஷத்துக்கு ஆளாகாமல், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது, தி.மு.க., தலைமை.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோருக்கு பின், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியுடன், 2021 சட்டசபை தேர்தல் நடந்துமுடிந்துள்ளது. இதில், பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., கூட்டணியும், ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க., கூட்டணியும் நேரடியாக களத்தில் இறங்கின.

கொரோனா பரவலுக்கு நடுவே, கடும் போட்டியுடன் நடைபெற்ற தேர்தலில், ஜாதி, மத வேறுபாடுகளும், மொழி ரீதியான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு, ஓட்டுகள் பிரிக்கப்பட்டன. இச்சூழலில், தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில், தி.மு.க.,வை பொறுத்தவரை, காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் களம் இறங்கி, 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளது. அ.தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு வந்துள்ளது.

இந்நிலையில், ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை பலமாக, 117 இடங்கள் இருந்தால் போதும். தி.மு.க., 120க்கும் மேற்பட்ட இடங்களை, தனி மெஜாரிட்டியுடன் கைப்பற்றும் அளவுக்கு முன்னிலையில் உள்ளது. எனவே, கூட்டணி கட்சிகளின் தயவு இன்றி, தனித்தே ஆட்சி அமைக்கும் வலிமையை, தி.மு.க., பெற்றுள்ளது.


latest tamil newsகடந்த, 2006ம் ஆண்டில், தி.மு.க., பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைக்க தேவையான, 'மெஜாரிட்டி' இல்லை. 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.அதனால், கூட்டணியில் இருந்த காங்கிரசின், 34 பேரின் துணையுடன், ஆட்சி நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த காரணத்தால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், அவ்வப்போது அமைச்சரவையில் பங்கு கேட்டு, கோஷங்கள் எழுப்பிவந்தனர்.

கூட்டணி ஆட்சி கோஷத்தை, அப்போதைய முதல்வர் கருணாநிதி சமாளித்து, ஐந்து ஆண்டுகள் ஆட்சியை சிரமப்பட்டு முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காங்கிரசின் ஆட்சியில் பங்கு கோஷத்தால், அரசியல் மற்றும் கொள்கை ரீதியாக, பல முடிவுகளை, தனியாக எடுக்க முடியாமல், தி.மு.க., திணறியது.

அத்துடன், காங்கிரஸ் தயவால், தி.மு.க., ஆட்சியில் இருந்ததால், 'மைனாரிட்டி அரசு' என்ற, விமர்சனத்திற்கு உள்ளானது.இந்த முறை, அதுபோன்ற தர்மசங்கடங்கள் இல்லாமல், காங்கிரசின் நெருக்கடிக்கு ஆளாகாமல், தி.மு.க., ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மே-202100:53:13 IST Report Abuse
thiagarajan V minority அளவில் mla க்களை வைத்துக்கொண்டே 5 வருடங்களை ஓட்டியவர்கள் தான் திமுக கூட்டம். majority இருந்தால் தாங்காது.
Rate this:
Cancel
MURUGESAN - namakkal,இந்தியா
03-மே-202116:05:38 IST Report Abuse
MURUGESAN லஞ்சம் ஊழல் இல்லாத ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையில் கனவுகளுடன் காத்திருக்கும் தமிழக மக்கள். நிறைவேறுமா எங்கள் பேராசை.
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
03-மே-202115:54:06 IST Report Abuse
Anbuselvan வாழ்த்தட்டுக்கள். பதினாறு அடி லோக் சபா தேர்தலில் பாய்ந்தீர்கள். இப்போது முப்பத்தி ரெண்டு ஆதி பாய்ந்து இருக்கிறீர்கள். மைனாரிட்டி திமுக அரசு என யாரும் கூற முடியாத படி செய்து உள்ளீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X