அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: ரஜினி ஒரு தீர்க்கதரிசி!

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (97)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:முளு.தியாகராஜ் பாண்டியன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் ரஜினி, கட்சி துவங்கி, தேர்தலில் போட்டியிடுவார் என, அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கடந்த டிச., 29-ல், 'நான் அரசியலுக்கு வரவில்லை; என்னை மன்னியுங்கள்' எனச் சொல்லி,
Rajini,Rajinikanth,politics,ரஜினி,ரஜினிகாந்த்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


முளு.தியாகராஜ் பாண்டியன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் ரஜினி, கட்சி துவங்கி, தேர்தலில் போட்டியிடுவார் என, அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கடந்த டிச., 29-ல், 'நான் அரசியலுக்கு வரவில்லை; என்னை மன்னியுங்கள்' எனச் சொல்லி, பின்வாங்கினார். அவரது இந்த அறிவிப்பு, அவரது ரசிகர்களை மட்டுமல்லாது, மாற்று அரசியலை எதிர்பார்த்து காத்திருந்த நடுநிலையாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ரஜினியின் இந்த முடிவை, பலரும் பலவிதமாக விமர்சனம் செய்தனர்; ஆனால், அவரோ தன் முடிவில் உறுதியாக இருந்தார்.'கொரோனா பரவல் அதிகரிக்கும். என் சுயநலத்திற்காக, நான் யாரையும் பலிகடா ஆக்க விரும்பவில்லை' என, தன் நிலையை தெளிவுபடுத்தினார். அரசியலில், ரஜினியோடு இணைந்து பயணிக்க நினைத்த தமிழருவி மணியன் விரக்தி அடைந்து, 'நான் இனிமேல் அரசியலுக்கு வரவில்லை' என, அறிவித்தார்.

இந்நிலையில், தமிழருவி மணியனுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது. சித்த மருத்துவ சிகிச்சை பெற்று, நலமடைந்து, வீடு திரும்பியுள்ளார். அவர், 'ரஜினி எடுத்தது நல்ல முடிவு என்பதை, இப்போது உணர்ந்து கொண்டேன்' எனக் கூறியுள்ளார். 'கொரோனா முழு வீச்சில் பரவக் காரணம், ஐந்து மாநில தேர்தல் தான். தேர்தல் பிரசாரத்தில் கூடிய மக்கள் கூட்டம் தான் காரணம். இதை தடுக்க தவறிய தேர்தல் ஆணையத்தை கொலைக் குற்றவாளி என்று கூட அறிவிக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


latest tamil newsதேர்தல் மூலம் கொரோனா பரவும் என, ரஜினி அன்று சொன்னதை, இன்று அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் இது, கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றது! தமிழ் மக்களின் சினிமா மோகம், உலகறியும். துண்டு துக்கடா நடிகர் வந்தாலே, கட்டுக்கடங்காத கூட்டம் கூடும். உலக அளவில் புகழ் பெற்ற, 'சூப்பர் ஸ்டார்' ரஜினி, நம் ஊருக்கு வருகிறார் என்றால், மக்கள் கூட்டம் அலை மோதும்; அதன் மூலம், கொரோனா பரவும். இதை உணர்ந்த ரஜினி, தான் அரசியலுக்கு வருவதை விட, மக்களின் உயிர் தான் முக்கியம் என, அறிவித்தார்.

அவர் பதவிக்காகவோ, பணம் சம்பாதிக்கவோ அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய நினைத்தார். ஆனால் காலம், வழிவிடவில்லை; நாகரிகமாக ஒதுங்கிக் கொண்டார்.தேர்தலால் கொரோனா பரவும் என்பதைச் சொன்ன அவர், தீர்க்கதரிசி தான் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement
வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
04-மே-202103:16:13 IST Report Abuse
spr வந்துட்டா அப்படியே வாரிடுவாரு. அவருக்கு உசிரு பயம் அதனாலே தேர்தல் அலைச்சல் உயிர் போயிடுனும்னு பயந்து வேண்டாம்னார் தமிழருவி மாதிரி நாலு ஜால்றா கிடைச்சா கமலு கூட இப்ப சொல்லுவாரு அட போங்கப்பா இப்படிச் சொல்லிச் சொல்லியே அவங்க சம்பாதிக்கிறான் நாமும் ஏமாந்து போகிறோம் இதே எதிர்கட்சிகள்தான் கொரோனாவைக் காரணம் காட்டி மோடி தேர்தலை ஒத்தி வைச்சாலும் வைப்பார் அப்படின்னாங்க உச்ச நீதிமன்றம் இன்னும் ஒருபடி மேலே போய் கொரோனா காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியது ஆனால் தேர்தலைத் தடை செய்ய உத்தரவிடவில்லை இப்பொழுது "கொரோனா முழு வீச்சில் பரவக் காரணம், ஐந்து மாநில தேர்தல் தான். தேர்தல் பிரசாரத்தில் கூடிய மக்கள் கூட்டம் தான் காரணம். இதை தடுக்க தவறிய தேர்தல் ஆணையத்தை கொலைக் குற்றவாளி என்று கூட அறிவிக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நம்மை முட்டாளாக்கறதுன்னு எல்லாம் கங்கணம் கட்டிக்கிட்டு அலையறாங்க
Rate this:
Cancel
baygonspray - Aryan,ஈரான்
04-மே-202102:41:04 IST Report Abuse
baygonspray சுஷ்மா ஸ்வராஜ் அருண் ஜெட்லீ வரிசையில் தானும் போய்விடுவோம் என்று பயந்து அரசியலுக்கு வரவில்லை
Rate this:
Cancel
krishna_dharan - NJ,யூ.எஸ்.ஏ
03-மே-202121:03:16 IST Report Abuse
krishna_dharan Useless person I was definitely a big fan. spineless/ selfish money maker. Even if he stood like Kamal and lost I would have appreciated. சும்மா film காமிக்கதான் இவன் லாயக்கு.. இமய மலை போரேன்னுட்டு போக்கு காமிப்பான்.. பணம் குடுத்தகா தயாநிதி மாறன் கால்ல விழுந்து act பண்ணுவான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X