அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொகுதி மாறி போட்டியிட்டும் 'கெத்து' காட்டிய அருண்குமார்

Added : மே 03, 2021
Share
Advertisement
கோவை, : கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த அருண்குமார், தொகுதி மாறி, கவுண்டம்பாளையத்தில் போட்டியிட்டும், சுற்றுக்கு சுற்று அதிகமான ஓட்டுகள் வாங்கி, முன்னிலை வகித்தார். கோவை, கவுண்டம்பாளையம் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் அருண்குமார், தி.மு.க., சார்பில் பையா (எ) கிருஷ்ணன் போட்டியிட்டனர். இவ்விருவருக்குமே போட்டி காணப்பட்டது. வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த

கோவை, : கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த அருண்குமார், தொகுதி மாறி, கவுண்டம்பாளையத்தில் போட்டியிட்டும், சுற்றுக்கு சுற்று அதிகமான ஓட்டுகள் வாங்கி, முன்னிலை வகித்தார்.

கோவை, கவுண்டம்பாளையம் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் அருண்குமார், தி.மு.க., சார்பில் பையா (எ) கிருஷ்ணன் போட்டியிட்டனர். இவ்விருவருக்குமே போட்டி காணப்பட்டது. வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த அருண்குமார், தொகுதி மாறி, கவுண்டம்பாளையத்தில் போட்டியிட்டதால், ஜெயிப்பது கஷ்டம் என, எதிர்க்கட்சியினர் பேசிக்கொண்டனர்.கடந்த, 2016 தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட ஆறுக்குட்டி, 1,10,548 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றார். தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பையா (எ) கிருஷ்ணன், 1,01,785 ஓட்டுகள் பெற்று, 8,763 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இம்முறை அ.தி.மு.க., வேட்பாளர் அருண்குமார், தொகுதி மாறி போட்டியிடுவதாலும், ஆறுக்குட்டிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாலும், அ.தி.மு.க., அதிருப்தி ஓட்டுகளாலும், எளிதாக ஜெயிக்கலாம் என, தி.மு.க.,வினர் கணக்கு போட்டிருந்தனர்.ஆனால், கவுண்டம்பாளையம் தொகுதியில், முதல் சுற்றிலேயே, 1,302 ஓட்டுகள் கூடுதல் பெற்று, அ.தி.மு.க., வேட்பாளர் அருண்குமார் முன்னிலை பெற்றார். 10வது சுற்றில், 42,714 ஓட்டுகள், 21வது சுற்றில், 85,011 ஓட்டுகள் பெற்று, 10,632 ஓட்டுகள் பெற்று, முன்னிலை பெற்றார். தி.மு.க., வேட்பாளர் பையா (எ) கிருஷ்ணன், 74,379 ஓட்டுகள் பெற்று, பின்தங்கியிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X