வடக்கை மீண்டும் வசப்படுத்திய இலை!| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வடக்கை மீண்டும் வசப்படுத்திய இலை!

Added : மே 03, 2021
Share
கோவை ; கோவை வடக்கு தொகுதியை அ.தி.மு.க., மீண்டும் தன்வசப்படுத்தியது.கோவை வடக்கு தொகுதியில், 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அ.தி.மு.க., சார்பில், அம்மன் அர்ச்சுணன், தி.மு.க., சார்பில் சண்முகசுந்தரம், ம.நீ.ம., சார்பில் தங்கவேலு போட்டியிட்டனர். இத்தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் வடவள்ளி சந்திரசேகரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தெற்கு தொகுதியை, பா.ஜ.,வுக்கு

கோவை ; கோவை வடக்கு தொகுதியை அ.தி.மு.க., மீண்டும் தன்வசப்படுத்தியது.கோவை வடக்கு தொகுதியில், 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அ.தி.மு.க., சார்பில், அம்மன் அர்ச்சுணன், தி.மு.க., சார்பில் சண்முகசுந்தரம், ம.நீ.ம., சார்பில் தங்கவேலு போட்டியிட்டனர்.

இத்தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் வடவள்ளி சந்திரசேகரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. தெற்கு தொகுதியை, பா.ஜ.,வுக்கு ஒதுக்கியதால், மாநகர் மாவட்ட செயலாளரான அம்மன் அர்ச்சுனனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.தொகுதி மாறி போட்டியிடுவ தாலும், அ.தி.மு.க.,வினருக்குள் அதிருப்தி நிலவியதாலும், தி.மு.க.,வுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.கட்சியினருக்குள் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி, வீதி வீதியாக பிரசாரம் செய்ததால், அ.தி.மு.க., வெற்றி பெற்றது.

மொத்தம், 36 சுற்றுகள் எண்ணப்பட்டன. அனைத்து சுற்றிலும் அ.தி.மு.க.,வே முன்னிலை வகித்தது. இறுதியாக, 4,001 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.தேர்தல் முடிவு விபரம்:மொத்த ஓட்டு - 3,38648பதிவானவை - 2,02,799அ.தி.மு.க., வெற்றிவித்தியாசம் - 4,001அம்மன் அர்ச்சுனன் (அ.தி.மு.க.,) - 81,454சண்முகசுந்தரம் (தி.மு.க.,) - 77,453தங்கவேல் (ம.நீ.ம.,) - 26,503பாலேந்திரன் (நாம் தமிழர்) - 11,433அப்பாதுரை (அ.ம.மு.க,) - 1,659நோட்டா - 1,701

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X