அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக சட்டசபையில் இம்முறை அதிக கட்சிகள்

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : தமிழக சட்டசபைக்கு இம்முறை அதிக கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் செல்ல உள்ளனர்.தமிழக சட்டசபையில்கடந்த முறை எதிர்க்கட்சி வரிசையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றனர். ஆளும் கட்சி வரிசையில் அ.தி.மு.க. இடம் பெற்றது. அக்கட்சி சின்னத்தில் வெற்றி பெற்ற சிறிய கட்சி எம்.எல்.ஏ.க்கள் மூவர் இருந்தனர்.தி.மு.க.
TN Election Results, ADMK, DMK, Election Results 2021

சென்னை : தமிழக சட்டசபைக்கு இம்முறை அதிக கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் செல்ல உள்ளனர்.

தமிழக சட்டசபையில்கடந்த முறை எதிர்க்கட்சி வரிசையில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றனர். ஆளும் கட்சி வரிசையில் அ.தி.மு.க. இடம் பெற்றது. அக்கட்சி சின்னத்தில் வெற்றி பெற்ற சிறிய கட்சி எம்.எல்.ஏ.க்கள் மூவர் இருந்தனர்.

தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்றுஉள்ளது. அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்கின்றனர். மேலும் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்கு செல்கின்றனர்.


latest tamil news



எதிர்க்கட்சி வரிசையில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பா.ம.க. - பா.ஜ. - எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற உள்ளனர். அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்ட புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தியும் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்கிறார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MURUGESAN - namakkal,இந்தியா
03-மே-202116:19:58 IST Report Abuse
MURUGESAN வாக்களித்த வாக்காள பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் ஜெயித்து விட்டீர்கள். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்களுக்கு ஒரு குறையும் இல்லை. சந்தோசமாக வாழப்போகிறீர்கள். அனைவரும் தான்.
Rate this:
Cancel
Subramaniyam Veeranathan - Bangalore,இந்தியா
03-மே-202110:21:45 IST Report Abuse
Subramaniyam Veeranathan வாங்க வாங்க எல்லோரும் வாங்க. தனி தனியாக ஒவொருவரும் கட்சி ஆரம்பித்து எல்லோரும் சட்டசபைக்கு போவோம். இந்த அரசியல்வாதிகள் ஏன் இரண்டு அல்லது மூன்று கட்சிக்குள் சேர்ந்து ஒற்றுமையாக மக்கள் தொண்டு செய்வதில்லை.
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
03-மே-202107:17:35 IST Report Abuse
கொக்கி குமாரு சகாயம் ஐஏஎஸ் கட்சியின் ஓட்டுக்களை எப்போ எண்ணுவாங்க?
Rate this:
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
03-மே-202117:28:20 IST Report Abuse
தமிழ்வேள்அச்சரப்பாக்கம் ஆட்டையை போட்ட மலை மாதா கோவிலில் என்ன இடம் பார்த்திருக்கிறார்களாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X