அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுற்றுக்கு சுற்று கமலை துரத்திய வானதி: கோவை தெற்கில் பா.ஜ., வெற்றி!

Added : மே 03, 2021
Share
Advertisement
கோவை : கோவை தெற்கு தொகுதியில், கமல் தொடர்ந்து முன்னிலை வகித்தார். கடைசி மூன்று சுற்றிலும், தபால் ஓட்டிலும் கூடுதல் ஓட்டுகள் பெற்று, பா.ஜ., தேசிய மகளிரணி செயலாளர் வானதி வெற்றி பெற்றார். 1,728 ஓட்டு வித்தியாசத்தில் கமல் தோல்வி அடைந்தார்.கோவை தெற்கு தொகுதியில், முதல் சுற்றில் இருந்தே, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், முன்னணியில் இருந்தார். காங்., மாநில நிர்வாகி, 'மயூரா'

கோவை : கோவை தெற்கு தொகுதியில், கமல் தொடர்ந்து முன்னிலை வகித்தார். கடைசி மூன்று சுற்றிலும், தபால் ஓட்டிலும் கூடுதல் ஓட்டுகள் பெற்று, பா.ஜ., தேசிய மகளிரணி செயலாளர் வானதி வெற்றி பெற்றார்.

1,728 ஓட்டு வித்தியாசத்தில் கமல் தோல்வி அடைந்தார்.கோவை தெற்கு தொகுதியில், முதல் சுற்றில் இருந்தே, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், முன்னணியில் இருந்தார். காங்., மாநில நிர்வாகி, 'மயூரா' ஜெயக்குமார் இரண்டாமிடத்தில் இருந்தார். பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன் மூன்றாமிடத்தில் இருந்தார்.ஏழாவது சுற்றில், காங்., வேட்பாளருக்கும், பா.ஜ., வேட்பாளருக்கும் இடையே, 552 ஓட்டுகளே வித்தியாசம் இருந்தது. எட்டாவது சுற்றில், காங்., வேட்பாளரை விட, 39 ஓட்டுகள் அதிகம் பெற்று, பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசன் இரண்டாமிடத்துக்கு முன்னேறினார்.

அடுத்தடுத்த சுற்றுகளில், காங்., வேட்பாளர் பின்தங்கியே இருந்தார்.மெல்ல மெல்ல வானதி முன்னேற ஆரம்பித்தார். கமலுக்கும், வானதிக்கும் இடையேயான ஓட்டு வித்தியாசமும் மிகவும் குறைவாகவே இருந்தால், மக்கள் நீதி மய்யத்தினர் மிகவும் கவலையுடன் காணப்பட்டனர். கமல், 14வது சுற்றில், 27,589 ஓட்டுகள் பெற்றிருந்தார். வானதியோ, 26,400 ஓட்டுகள் பெற்று, துரத்தினார். இருவருக்கும் இடையே வித்தியாசம் - 1,189 ஓட்டுகளே. 15வது சுற்றில், 1,247 ஓட்டுகளாகவும், 16வது சுற்றில், 1,114 ஓட்டுகளும் வித்தியாசம் குறைந்தது. மொத்தம், 26 சுற்றுகள் மற்றும் தபால் ஓட்டுகள் எண்ண வேண்டிய நிலை இருந்ததால், இரு கட்சியினர் திக்...திக்... மனநிலையில் காணப்பட்டனர்.மதியம் வரை உற்சாகமாக காணப்பட்ட காங்., கட்சியினர், இரண்டாமிடத்துக்கு பா.ஜ., முன்னேறியதும் 'அப்செட்' ஆகினர். ஆனால், 19வது சுற்றில் மீண்டும் நிலைமை மாறியது. 36,885 ஓட்டுகள் பெற்ற கமல், 1,874 ஓட்டுகள் வித்தியாசத்தில் முதலிடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தார். 35,011 ஓட்டுகள் பெற்று, காங்., மயூரா ஜெயக்குமார் இரண்டாமிடத்துக்கு முன்னேறினார்.

இவரை விட, 172 ஓட்டுகள் குறைவாக பெற்றதால், 34,839 ஓட்டுகளுடன் வானதி சீனிவாசன் மீண்டும் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார்.அடுத்த சுற்றில், (20வது சுற்று) 39,326 ஓட்டுகள் பெற்று, 1,632 ஓட்டுகள் வித்தியாசத்தில், முன்னிலையை கமல் தக்க வைத்தார். 37,694 ஓட்டுகள் பெற்று, பா.ஜ., வானதி மீண்டும் இரண்டாமிடத்துக்கு முன்னேறினார். 36,432 ஓட்டுகளே பெற்றதால், காங்., மயூரா ஜெயக்குமார் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டார்.கமலுக்கு பின்னடைவுகோவை தெற்கு தொகுதியில், மொத்தம், 26 சுற்று ஓட்டுகள் எண்ணப்பட்டன. 21வது சுற்றில் இருந்து போட்டி மிகவும் கடுமையாக காணப்பட்டது. 21வது சுற்றில், 979, 22வது சுற்றில், 176 என, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் கமல் முன்னிலை பெற்றிருந்தார்.23வது சுற்றில், 890 ஓட்டுகள் அதிகமாக பெற்று, 45,932 ஓட்டுகளுடன், பா.ஜ., வானதி முன்னிலை பெற்றார். 45,042 ஓட்டுகளுடன், கமல் இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டார். 24வது சுற்றில், 48,270 ஓட்டுகள் பெற்று, 1,614 ஓட்டு வித்தியாசத்தில் வானதி முன்னிலையை தொடர்ந்தார்.கடைசி மூன்று சுற்றிலும், தபால் ஓட்டிலும் அதிக ஓட்டு பெற்றதால், 26வது சுற்றில், 53,209 ஓட்டுகள் பெற்று, பா.ஜ., தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன், 1,728 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ம.நீ.ம., தலைவர் கமல், 51,481 ஓட்டுகள் பெற்று, தோல்வி அடைந்தார்.விவி பேட் ரசீது சரிபார்ப்புஒவ்வொரு தொகுதியிலும், விவிபேட் இயந்திரங்களை, குலுக்கல் முறையில், 5 பூத் பெட்டிகள் தேர்வு செய்து, ரசீதுகளை எண்ணி, இயந்திரங்களில் பதிவான ஓட்டு எண்ணிக்கையோடு ஒப்பிட தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, 5 இயந்திரங்களில் உள்ள ரசீதுகளை எண்ண, ஒரு மணி நேரம் ஆகும் என, தேர்தல் பிரிவினர் கூறினர். அதன் பிறகே அதிகாரப்பூர்வமாக அறிவித்து, சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தோல்வி உறுதி என தெரிந்ததால், கமல் புறப்பட்டுச் சென்றார்.ஓட்டு எவ்வளவுபா.ஜ., வானதி - 53,209ம.நீ.ம., கமல் - 51,481காங்கிரஸ் மயூரா ஜெயக்குமார் - 41,801பாரதிய ஜனதா வெற்றி வித்தியாசம் - 1,728வெறுப்பில் கிளம்பிய கமல்ஓட்டு எண்ணிக்கையை பார்க்க, நேற்று காலை, 9:30 மணிக்கு ஜி.சி.டி., கல்லுாரிக்கு கமல் வந்தார். சிறிது நேரம் ஓட்டு எண்ணிக்கையை பார்த்து விட்டு, கிளம்பிச் சென்றார். பின், மாலை, 6:30க்கு மீண்டும் வந்த அவர், ஓட்டு எண்ணும் அறையில், பா.ஜ., வேட்பாளர் வானதிக்கு அருகில் அமர்ந்து, கையில் பேப்பர், பேனாவுடன் சுற்று வாரியாக பெற்ற ஓட்டுகளை குறிப்பெடுத்தார். தபால் ஓட்டு, கடைசி மூன்று சுற்று சேர்த்து, 1,728 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால், 'அப்செட்'டான அவர், சோகத்துடன் கிளம்பிச் சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X