அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுக்கு பிரதிநிதியே இல்லாத கோவை! வளர்ச்சிப் பணிகள் தொடருமா...

Added : மே 03, 2021
Share
Advertisement
கோவை மாவட்டத்தில் தி.மு.க., தோல்வியடைந்திருப்பதால், இங்கு நடக்கும் வளர்ச்சிப் பணிகள் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வென்ற தி.மு.க., இந்தத் தேர்தலில் அத்தனை தொகுதிகளையும் இழந்து தோல்வியை சந்தித்துள்ளது.கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், தமிழக உள்ளாட்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை,

கோவை மாவட்டத்தில் தி.மு.க., தோல்வியடைந்திருப்பதால், இங்கு நடக்கும் வளர்ச்சிப் பணிகள் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த 2016 சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வென்ற தி.மு.க., இந்தத் தேர்தலில் அத்தனை தொகுதிகளையும் இழந்து தோல்வியை சந்தித்துள்ளது.கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், தமிழக உள்ளாட்சித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை என முக்கியத்துறைகள் அனைத்தையும் தொண்டாமுத்துார் எம்.எல்.ஏ.,வேலுமணி வைத்திருந்தார்.

அதனால் கோவை மாவட்டத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் கிடைத்தன. இந்தப் பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக, தி.மு.க., தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. தி.மு.க., சார்பில் வேலுமணியின் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, ஐகோர்ட் விசாரணையிலும் உள்ளது. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்திலும் நிறைய ஊழல் நடப்பதாக தி.மு.க., குற்றம்சாட்டி வந்த நிலையில்தான், இந்தத் தேர்தலில் தி.மு.க., படுதோல்வியைச் சந்தித்து உள்ளது. இதனால் கோவையில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் தொடர்ந்து நடக்குமா என்ற சந்தேகம், மக்களிடம் கிளம்பியுள்ளது.

அது மட்டுமின்றி, தி.மு.க.,வுக்கு இந்த மாவட்டத்தில் தொடர் தோல்வியே கிடைத்து வருவதால், தேர்தல் அறிக்கையில் தரப்பட்ட மெட்ரோ ரயில், விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. தற்போது நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளில் ஊழல் நடந்திருப்பதாக தி.மு.க., குற்றம் சாட்டி வரும் நிலையில், அதைக் காரணம் காட்டி பணிகளை நிறுத்தி வைப்பதற்கும் வாய்ப்புள்ளதாக தொழில் அமைப்பினர் பலரும் அச்சம் அடைந்துள்ளனர்.அமைச்சர் இல்லாத அவலம்கோவையின் தேவைகளை அரசிடம் எடுத்துச் சொல்வதற்கு, மாவட்டத்தில் ஆளும்கட்சியின் பிரதிநிதி என்று யாருமே இல்லாத நிலை முதல் முறையாக உருவாகியுள்ளது.

இதனால் இந்த மாவட்டத்துக்கு அமைச்சராக நியமிப்பதற்கும் ஒருவரும் இல்லாத அவல நிலை உருவாகியுள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே தொழில்துறை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வரும் சூழலில், இந்தத் தோல்விக்காக தி.மு.க., பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கினால், அது தங்களைப் பெரிதும் பாதிக்குமென்று தொழில் அமைப்பின் நிர்வாகிகள் சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தி.மு.க., வாக்குறுதி அளித்திருப்பதால், கோவை மாநகராட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் இந்தப் பணிகளை தி.மு.க., விரைவாக நிறைவேற்றும் என்றும் மற்றொரு தரப்பில் நம்பிக்கை வெளிப்படுத்தப்படுகிறது.

அடுத்த ஐந்தாண்டுகளில், கோவையின் கட்டமைப்பை மேம்படுத்த தி.மு.க., முயற்சிக்கப் போகிறதா அல்லது தி.மு.க., கட்டமைப்பை உடைத்து சரி செய்வதில் கவனம் செலுத்தப் போகிறதா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X