அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருப்பூர் தெற்கில் தி.மு.க., வெற்றி

Added : மே 03, 2021
Share
Advertisement
திருப்பூர், : திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் செல்வராஜ், அ.தி.மு.க., வேட்பாளர் குணசேகரனை காட்டிலும் 4,682 ஓட்டுகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளராக மீண்டும் களமிறங்கிய, குணசேகரனுக்கும், செல்வராஜூக்கும் இடையே, ஒவ்வொரு சுற்றுகளிலும் ஓட்டுகள் முன்னிலை மாறி மாறி வந்ததால், இழுபறி நிலை காணப்பட்டது.இறுதியில், செல்வராஜூக்கு,

திருப்பூர், : திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் செல்வராஜ், அ.தி.மு.க., வேட்பாளர் குணசேகரனை காட்டிலும் 4,682 ஓட்டுகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்றார்.

அ.தி.மு.க., வேட்பாளராக மீண்டும் களமிறங்கிய, குணசேகரனுக்கும், செல்வராஜூக்கும் இடையே, ஒவ்வொரு சுற்றுகளிலும் ஓட்டுகள் முன்னிலை மாறி மாறி வந்ததால், இழுபறி நிலை காணப்பட்டது.இறுதியில், செல்வராஜூக்கு, வெற்றிக்கனி கிடைத்தது. முன்னாள் மேயரான செல்வராஜ், கடந்த முறை, இத்தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார். இந்த முறை கடைசி நேரத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் போராடி, தொகுதியை பெற்றார்.அ.ம.மு.க., வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் மேயர் விசாலாட்சி, பெருமளவில், அ.தி.மு.க., ஓட்டுகளை பிரிப்பார் என்று செல்வராஜ் எதிர்பார்த்த நிலையில், அவர் 1,757 ஓட்டுக்கள் மட்டுமே பெற்றார். இறுதியில், 4,709 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியை செல்வராஜ் சுவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X