அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிக வித்தியாசத்தில் வென்ற ஐ.பெரியசாமி; எதிர்த்தவர்களுக்கு டிபாசிட் காலி

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் ஐ.பெரியசாமி, 1.35 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் 'டிபாசிட்' இழந்துள்ளனர்.தி.மு.க., மாநில துணைப் பொதுச் செயலரான ஐ. பெரியசாமி, 1989ல் ஆத்துார் தொகுதியில், முதன் முறையாக வென்றார். 1991ல் தோல்வியடைந்தார்.
I Periyasamy, DMK, TN results

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் ஐ.பெரியசாமி, 1.35 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் 'டிபாசிட்' இழந்துள்ளனர்.

தி.மு.க., மாநில துணைப் பொதுச் செயலரான ஐ. பெரியசாமி, 1989ல் ஆத்துார் தொகுதியில், முதன் முறையாக வென்றார். 1991ல் தோல்வியடைந்தார். மீண்டும், 1996ல் வென்றார். 2001ல் தோல்வியடைந்தார். அதன்பின், 2006, 2011, 2016ல் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றார்.


latest tamil news



இம்முறையும் இதே தொகுதியில் போட்டியிட்டு, 1 லட்சத்து, 65 ஆயிரத்து, 809 ஓட்டுகளைப் பெற்றார். அவரை எதிர்த்த அ.தி.மு.க., கூட்டணி பா.ம.க., வேட்பாளர் திலகபாமா, 30 ஆயிரத்து, 241 ஓட்டுகளே பெற்றார். இருவருக்கும் வித்தியாசம், 1 லட்சத்து, 35 ஆயிரத்து, 568 ஓட்டுகள். இதனால் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர் மற்றும் எதிர்த்து போட்டியிட்ட, 19 பேரையும், டிபாசிட் இழக்க வைத்தவர் எனும் சாதனை படைத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மே-202100:49:57 IST Report Abuse
thiagarajan V இவன் ஒரு ரவுடியாச்சே. திமுகல இவனுகதான் இருப்பானுக. மோடியோடு இவனை ஒப்பிட்டு உங்கள் குடும்பத்திற்கு பாவத்தை சேர்க்காதீர்கள்.
Rate this:
Cancel
Suman - Mayiladuthurai ,இந்தியா
03-மே-202118:25:56 IST Report Abuse
Suman பார்க்க அப்படியே மோடியை போலவே உள்ளார்... வாழ்த்துக்கள்...மிக பெரிய சேவைக்கு மக்கள் தந்த பரிசு. இவளவு வித்தியாசத்தில் வெற்றி ஒருவர் வெற்றிபெறுவதை பார்க்க பெருமையாக உள்ளது. இவரை போல் எல்லா கட்சியினரும் சேவை செய்து மக்களிடம் வெற்றி பெறவேண்டும். நன்றி.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
03-மே-202115:58:15 IST Report Abuse
Vijay D Ratnam திண்டுக்கல் மாவட்டத்துல போயி திமுகவுக்கு எதிராக பாமக நின்றால், ஓட்டே போடாதீங்க போங்கடா என்றால் கூட ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கலாம். இப்ப என்ன தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிச்சிச்சு முதலமைச்சர் ஆக முடியுமா. கட்டுமர கம்பெனிக்கு காவடி தூக்க எத்தனை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று என்ன. துரைமுருகன் அடிச்சி புடிச்சி எழுநூறு வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்கறதுக்குள்ள நாக்கு தள்ளிடிச்சி, அதுக்காக அவருக்கு மந்திரி பதவி இல்லை என்று சொல்ல முடியுமா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X