பாலக்காட்டில் 'மெட்ரோமேன்' ஸ்ரீதரன் அதிர்ச்சி தோல்வி

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
பாலக்காடு: கேரளாவின் பாலக்காடு தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்த, பா.ஜ., கடைசி சுற்றுகளில் காங்கிரசிடம் தோல்வியை தழுவியது.கேரளாவில், பா.ஜ., வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று பாலக்காடு. இங்கு பா.ஜ., சார்பில், 'மெட்ரோமேன்' ஸ்ரீதரன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷாபி பரம்பில், 3,859 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
BJP, Metroman Sreedharan, loses, Palakkad

பாலக்காடு: கேரளாவின் பாலக்காடு தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்த, பா.ஜ., கடைசி சுற்றுகளில் காங்கிரசிடம் தோல்வியை தழுவியது.

கேரளாவில், பா.ஜ., வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் ஒன்று பாலக்காடு. இங்கு பா.ஜ., சார்பில், 'மெட்ரோமேன்' ஸ்ரீதரன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷாபி பரம்பில், 3,859 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல், கடைசி நேரம் வரை முன்னேறிக் கொண்டிருந்த ஸ்ரீதரன், இறுதி சுற்றுகளில் பின்னடைவை சந்தித்தார்.


latest tamil news


இதேபோல், திருச்சூர், நேமம் தொகுதிகளிலும், முன்னிலை வகித்த, பா.ஜ., கடைசி சுற்றுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது. பாலக்காடு மாவட்டம், திருத்தாலாவில் முன்னாள் எம்.பி., ராஜேஷ், ஷொர்ணுாரில் மம்மிக்குட்டி, ஒற்றப்பாலத்தில் பிரேம்குமார், கோங்காட்டில் சாந்தகுமாரி, பட்டாம்பியில் முகமத் முஹ்சின், தரூரில் சுமோத் ஆகிய, இடது ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

மேலும், சித்துாரில் கிருஷ்ணன்குட்டி, நெம்மாராவில் பாபு, ஆலத்துாரில் பிரசேனன், மலம்புழாவில் பிரபாகரன் ஆகிய இடது ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். மண்ணாக்காட்டில் ஐக்கிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த முஸ்லிம் லீக் வேட்பாளர் சம்சுதீன் வெற்றி பெற்று உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar Thamizhlan - Chennai,இந்தியா
04-மே-202114:26:49 IST Report Abuse
Kumar Thamizhlan படித்த மாநிலத்தில் இவர்களின் வேலைகள் நடக்காது என்பது நிரூபிக்க பட்டுள்ளது
Rate this:
Cancel
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு மாட்டுக்கரிக்காக இனத்தையே விற்கும் மல்லுகளிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்?
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
04-மே-202101:01:22 IST Report Abuse
மதுரை விருமாண்டி மோடி இவரை கவர்னராக்கி அழகு பார்ப்பாராக்கும் ..
Rate this:
NandaIndia, ஹிந்து என்று சொல்லி தலை நிமிர்வோம்ஷீலா தீக்ஷித்தை கவர்னராக்கி கான்க்ராஸ் அழகு பார்த்தது போலவா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X