அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு விழா: ஸ்டாலின்

Updated : மே 03, 2021 | Added : மே 03, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை : ''கொரோனா காலம் என்பதால் கவர்னர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளோம்'' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.மறைந்த தி.மு.க.தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நேற்று நள்ளிரவு மரியாதை செலுத்திய பின் ஸ்டாலின் அளித்த பேட்டி:சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு
DMK, MK Stalin, Stalin

சென்னை : ''கொரோனா காலம் என்பதால் கவர்னர் மாளிகையில் எளிமையாக பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளோம்'' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

மறைந்த தி.மு.க.தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நேற்று நள்ளிரவு மரியாதை செலுத்திய பின் ஸ்டாலின் அளித்த பேட்டி:சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் வழங்கி உள்ளனர்.

இந்த மகத்தான வெற்றிக்கு வழிவகுத்து தந்திருக்கும் அனைவருக்கும் தி.மு.க. சார்பில் இதயப்பூர்வமான நன்றி.தமிழகம் ஒரு பாதாளத்திற்கு போயிருக்கிறது என்பதை நாட்டு மக்கள் அறிந்து அதை சரி செய்ய தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வுடன் மிகப்பெரிய வெற்றியை எங்களுக்கு வழங்கி உள்ளனர்.

எந்த எதிர்பார்ப்போடு எந்த நம்பிக்கையுடன் அந்த வெற்றியை தந்துள்ளனரோ அதற்கேற்ற வகையில் பொறுப்பை உணர்ந்து எங்கள் ஆட்சி அதை நிறைவேற்றி தரும்.எங்களை எல்லாம் ஆளாக்கிய கருணாநிதி ஐந்து முறை தமிழகமுதல்வராக இருந்து தமிழக மக்களுக்கு ஆற்றிய பணிகளை உணர்ந்துஉள்ளோம். அவர் வழி நின்று ஆறாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்கக் கூடிய தி.மு.க. ஆட்சியில் அதை நிறைவேற்றுவோம்.

கருணாநிதி இருந்த காலத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வர வேண்டும் என எண்ணியிருந்தோம். அது நிறைவேறாமல் போய்விட்டது. அது ஒரு ஏக்கமாக இருந்தது. அந்த ஏக்கம் இன்று ஓரளவுக்கு போயிருக்கிறது.மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பை ஏற்று எங்களுக்கு ஓட்டளித்தவர்கள் 'இவர்களுக்கு ஓட்டளித்தது தான் நல்லதே' என மகிழும் வகையில் ஓட்டளிக்காதவர்கள் 'இவர்களுக்கு ஓட்டளிக்காமல் சென்று விட்டோமோ' என நினைக்கும் வகையில் எங்கள் பணி தொடரும்.

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நாங்கள் பொறுப்பேற்ற நாளில் இருந்து படிப்படியாக நிறைவேற்றும்முயற்சியில் ஈடுபடுவோம். ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்தல் அறிக்கை தந்துள்ளோமோ அதேபோல தொலைநோக்கு பார்வையுடன் ஏழு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். அதை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவோம். எங்கள் கடமையை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

நாளை எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி முறையாக தலைவரை தேர்வு செய்வோம். அதன்பின் அதிகாரிகளுடன் கலந்து பேசி பதவியேற்பு தேதியை முடிவு செய்து அறிவிப்போம். கொரோனா காலத்தை மனதில் வைத்துபதவிப் பிரமாண நிகழ்ச்சியை எளிமையாக கவர்னர் மாளிகையில் நடத்த முடிவு செய்துள்ளோம். தேதியை இன்று அல்லது நாளை அறிவிப்பேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.


'தினமலர்' ஆலோசனை ஏற்றார் ஸ்டாலின்


தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெறும் கட்சி பதவியேற்பு நிகழ்ச்சியை கவர்னர் மாளிகையில் எளிமையாக நடத்த வேண்டும் என ஏப். 30ல் 'தினமலர்' நாளிதழில் தலைப்புசெய்தியாக வெளியிடப் பட்டிருந்தது. இந்த ஆலோசனையை ஏற்று முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலின் பதவியேற்பு நிகழ்ச்சி எளிமையாக கவர்னர் மாளிகையில் நடக்கும் என நேற்று அறிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
03-மே-202120:33:02 IST Report Abuse
ஆப்பு கலைஞராட்சி வரவேண்டாம். உங்க மேயராட்சியும் வேண்டாம். வீராணம், கூவம், பூச்சிமருந்து, மஸ்டர் ரோல் எல்லாம் சேந்து நாத்தம் குடலைப் பிடுங்க வேண்டாம்.
Rate this:
Cancel
03-மே-202120:30:57 IST Report Abuse
ஆப்பு கெவுனர் மாளிகை எதுக்கு? அங்கு கொரோனா பரவாதா? காணொளியில் பதவி எந்ற்றுக் கொக்ளுங்கள். எல்லோருக்கும் நல்லது.
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
03-மே-202120:29:17 IST Report Abuse
raghavan வெற்றிக்கான சந்தோஷம் முகத்தில் இல்லை. தளர்வுடன் காணப்படுகிறார். கொரானாவை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காமல் வெல்வது கடினம் என்ற நிதர்சன நிலை, கேள்வி கேட்ட நிலையிலிருந்து பதில் சொல்லும் இடத்திற்கு மாற்றம் தந்த குழப்பம் எல்லாம் வெற்றி தந்த களிப்பை விரட்டி அடித்து விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X